திமுக எம்.பி. கனிமொழிக்கு பதவி: மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு! முதலமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்றார்! 

Photo of author

By Parthipan K

திமுக எம்.பி. கனிமொழிக்கு பதவி: மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு! முதலமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்றார்! 

மத்திய அரசு, ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்ராஜ் நிலைக்குழுவின் உறுப்பினர்களை நியமனம் செய்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது.    

மத்திய அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்ராஜ் நிலைக்குழுவின் உறுப்பினர்களாக லோக்சபா எம்.பி.,க்கள் 17 பேரும், ராஜ்யசபா எம்.பி.,க்கள் 10 பேரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இதில் திமுக வின் எம். பியும், மகளிரணி செயலாளருமான கனிமொழி அவர்கள்  மத்திய அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்ராஜ் நிலைக்குழுவின் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இதற்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டிருந்தது. இதையடுத்து தூத்துக்குடி திமுக எம்.பி கனிமொழி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.