பொய்யான டுவிட்டர் பதிவுக்கு மன்னிப்பு கேட்ட திமுக எம்.பி! பாமகவினர் நகைப்பு!!

Photo of author

By Jayachandiran

பொய்யான டுவிட்டர் பதிவுக்கு மன்னிப்பு கேட்ட திமுக எம்.பி! பாமகவினர் நகைப்பு!!

திமுகவின் எம்பி டாக்டர்.செந்தில்குமார் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்ய பொய்யான தகவலுக்கு மன்னிப்பு கேட்டுள்ளார்.

சென்னையில் நடந்த குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் காவல்துறை தடியடி நடத்தி போராட்டத்தை கலைத்தனர். இந்த சம்பவம் இணையத்தில் வீடியோ மற்றும் படங்களாக மிக வேகமாக பரவியது. இந்த சம்பவம் குறித்து திமுகவின் எம்பி டாக்டர்.செந்தில்குமார் தனது டுவிட்டர் பக்கத்தில், சென்னை போராட்டத்தில் நடந்த வன்முறைக்கு அதிமுக மற்றும் பாமக கட்சிகள்தான் காரணம் என்று குற்றம்சாட்டி டுவிட் செய்திருந்தார்.

https://twitter.com/DrSenthil_MDRD/status/1228673464275329025?s=19

டுவிட்டரில் கூறியிருப்பதாவது: இதற்கு காரணம் ஆகிய அதிமுக அரசு மற்றும் ராமதாஸ் பதில் சொல்லியே ஆக வேண்டும். பாஜக அமல்படுத்தி CAA சட்டத்திற்கு ஆதரவாக அதிமுக மற்றும் பாமக ஆதரவு வாக்கின் விளைவுதான் இன்று தமிழகம் சந்திக்கும் இந்த நிலைக்கு காரணம் என்று பதிவு செய்திருந்தார். அதில் ஒரு இளைஞர் அடிபட்டு ரத்த வெள்ளத்தில் இருப்பது போற்றும் இன்னொரு படத்தையும் தவறாக பயன்படுத்தி இருந்தார். இந்த இரண்டு படங்களுமே போராட்டத்திற்கு சம்பந்தம் இல்லாத படங்களாக பின்பு ஆதாரத்துடன் விளக்கப்பட்டது.

பின்னர், தான் டுவிட்டரில் பதிவிட்டது உறுதி செய்யப்படாத படங்கள்தான் போராட்டத்தில் நடந்த சம்பவங்கள் அல்ல என்றும், விபத்தில் காயம் பட்டவர் என்றும் அறிந்த பிறகு அப்பதிவை நீக்கிவிட்டு மறுபதிவில் கவனம் இல்லாமல் பதிவிட்டதாக ஆங்கிலத்தில் வருத்தம் தெரிவித்திருந்தார். ஒரு எம்பியாக இருந்து கொண்டு உறுதி செய்யாத தகவலை பதிவு செய்யலாமா என்று பலர் கேள்வி எழுப்பினர். சிலர் பாராட்டியும் வருகின்றனர்.

இவரின் செயலுக்காக அதிமுக மற்றும் பாமக கூட்டணியினர் இடையே நகைப்பை ஏற்படுத்தி உள்ளது.