குடியரசு தலைவரை திமுக எம்பிக்கள் சந்திப்பு!! மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட நடவடிக்கை வெளிவந்த தகவல்!!

Photo of author

By Jeevitha

குடியரசு தலைவரை திமுக எம்பிக்கள் சந்திப்பு!! மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட நடவடிக்கை வெளிவந்த தகவல்!!

Jeevitha

DMK MPs meet the President!! The information about the operation to maintain peace in Manipur!!

குடியரசு தலைவரை திமுக எம்பிக்கள் சந்திப்பு!! மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட நடவடிக்கை வெளிவந்த தகவல்!!

மணிப்பூரில் இரண்டு பழங்குடியினர்  இடையே மோதல் ஏற்பட்டு வன்முறையாக வெடித்தது. அதனை தொடர்ந்து  இரண்டு பழங்குடியின பெண்களை ஒரு கும்பல் நிர்வாணமாக வீதிகளில் அழைத்துச் செல்வது போன்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வைரலானது.

இந்த சம்பாவத்திற்கு கண்டனம் தெரிவித்து  நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து மழைக் கலக் கூட்டத் தொடரில்  எதிர்க்கட்சிகள் தொடர்ந்து மணிப்பூர் பிரச்சனை குறித்து அமளியில் ஈடுப்பட்டு வருகிறது.

மேலும்  மணிப்பூர் விவகாரம் குறித்து எதிர்க்கட்சிகள்  பிரதமர் மோடி இடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டு வருகிறது. மேலும் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை  எதிர்க்கட்சிகள் கொண்டுவந்தது.  இந்த நிலையில் வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூர் கள நிலவரத்தை அறிந்து அவர்களுக்கு தேவையான உதவிகளை செய் “இந்தியா” கூட்டணி மணிப்பூர் ஜூலை 29 ஆம் தேதி சென்றது.

மேலும் இதில் 2 குழு 20 க்கும் மேற்பட்ட எதிர்கட்சிகளின் எம்.பி.க்கள் மணிப்பூர் சென்று ஆய்வு நடதினார்கள். அதனை தொடர்ந்து அந்த பயணம் 2 நாட்கள் நடைபெற்றது. இவர்கள் பாதுகாப்பு முகாமில் தங்கவைத்துள்ள மக்களை சந்தித்து அறுதல் கூறினார்கள். அதனையடுத்து இந்தியா கூட்டணியில் திமுக வை சென்ற எம்.பி. கனி மொழியும் மணிப்பூர் முகாமில் தங்கிருந்த மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.

மேலும் எதிர்கட்சிகள் பல்வேறு பகுதிகளில் குழுக்களாக பிரிந்து ஆய்வு நடத்தி பின்னர் இம்பாலில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு சென்று எம்.பி.க்கள் மனு அளித்தார்கள். அதன் பின்  மீண்டும் டெல்லி திரும்பிய குழு நாடாளுமன்றத்தில் உள்ள காங்கிராஸ் அலுவலகத்தில் இந்தியா கூட்டணி தலைவர் ஆலோசனை நடத்தினார். காங்கிரஸ் தலைவரிடம் மணிப்பூர் நிலவரம் குறித்து எடுத்துரைத்தார்கள்.

அதன் பின் தற்போது ஜூலை 29 , 30 ஆம் தேதி நடத்திய ஆய்வுகளை குறித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை சந்திந்து பேசினார்கள்.  மேலும் குடியரசு தலைவரிடம் மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது.

அதனை தொடந்து திமுக சார்பில் எம்.பி.கனிமொழி, டி.ஆர்.பாலு, ஆ.ராசா ஆகியோர் கலந்து கொண்டார்கள். அந்த சந்திப்பில் மணிப்பூர் உண்மை நிலவரத்தை எடுத்துரைத்தார்கள்.