திமுக ஊராட்சி மன்ற தலைவர் மகன் அளித்த பாலியல் தொல்லை! கண்டுகொள்ளாத போலீசார்!

Photo of author

By Rupa

திமுக ஊராட்சி மன்ற தலைவர் மகன் அளித்த பாலியல் தொல்லை! கண்டுகொள்ளாத போலீசார்!

பெண் குழந்தைகளுக்கு எதிராக பாலியல் சீண்டல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சிறுவயதிலேயே பல ஆண்களின் சொல்லுக்கு மயங்கி தங்களது வாழ்க்கையை தொலைத்து விடுகின்றனர். பள்ளிக்கு சென்று படிக்கும் வயதினில் இந்த பாலியல் துன்புறுத்தலால் மனவேதனைக்கு உள்ளாகிவிடுகின்றனர். குறிப்பாக இந்த ஆன்லைன் கல்வி முறை ஆரம்பித்த காலத்தில் பல பெண் குழந்தைகள் பல இன்னல்களில் சிக்கி விடுகின்றனர். சமூக வலைத்தள பக்கத்தில் முதலில் நண்பராக பேச ஆரம்பித்து பிறகு காதல் வசப்பட்டு அவர்களுக்கு தன்னையே தரும் அளவிற்கு துநிந்துவிடுகின்றனர். அப்படித்தான் ஒரு சம்பவம் இருக்குற மாவட்டத்தில் நடைபெற்று உள்ளது. விருதுநகர் மாவட்டம் சாத்தூர் என்ற பகுதியில் வசிப்பவர் தான் தெய்வானை மற்றும் அவரது மூன்று பிள்ளைகள்.

அதே பகுதியில் ஊராட்சி மன்ற தலைவரும் வசித்து வருகிறார். தெய்வானையின் 16 வயது மகள் மற்றும் ஊராட்சி மன்ற தலைவரின் மகன் சுலைமான் என்பவரும் காதலித்து வந்துள்ளனர். சுலைமான் என்பவர் அந்த 16 வயது பெண்ணுக்கு செல்போன் வாங்கித் தந்து உள்ளார். இதனை அறிந்த அந்த சிறுமியின் தாயார் செல்போனை வாங்கி அதனை சுலைமான் வீட்டிற்கு கொடுக்க சென்றுள்ளார். அப்பொழுது சுலைமானின் தாயார் மற்றும் அவரது குடும்பத்தினர் தெய்வானை மற்றும் அவரது மகனை தாக்கியுள்ளனர். இதனையடுத்து இடைவிடாது அந்த பதினாறு வயது சிறுமிக்கு ஊராட்சி மன்ற தலைவரின் மகன் சுலைமான் பாலியல் துன்புறுத்தல் கொடுத்துள்ளார்.

இதுகுறித்து பலமுறை காவல் துறையில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஏன் என்றால் அவர் திமுக ஊராட்சி மன்ற தலைவரின் மகன் என்பதால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனையடுத்து ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்ற தெய்வானை மற்றும் அவரது மகன் இருவரும் தீக்குளிக்க முயன்றனர். அப்பொழுது தெய்வானைக்கும் வலிப்பு ஏற்பட்டு விட்டது. சிறிது நேரத்திலேயே ஆட்சியர் அலுவலகம் சற்று பரபரப்பாக காணப்பட்டது. பிறகு தெய்வானையை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.