திட்டம் போட்டு உள்ளாட்சித் தேர்தலில் பழி வாங்கியதா திமுக? ஒரே கல்லில் 2 ”மாங்காய்” பறிக்க திட்டம்?
உள்ளாட்சித் தேர்தல் நடத்த தடை விதிக்க வேண்டும் என திமுக அவசர வழக்கு தொடர்ந்ததால், புதிதாக பிரிக்கப்பட்ட காஞ்சிபுரம், வேலூர், நெல்லை, தென்காசி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 9 மாவட்டங்களில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது திமுகவுக்கு கிடைத்த வெற்றி என அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் பேட்டி அளித்தார். இட ஒதுக்கீடு பின்பற்றவில்லை என்று முதலில் தடை வாங்கிய திமுக, இப்போது வார்டு வரையறை செய்யவில்லை என்று அவசர வழக்கு போட்டு தடை வாங்கியது என்ற கேள்வி எழுகிறது.
இதற்கு காரணம் என்னவாக இருக்கும் என்று விசாரித்தபோது காதில் விழுந்த செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தமிழகத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை கண்ட திமுக, அடுத்து நடந்த விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய 2 இடைத்தேர்தலில் படுதோல்வி அடைந்தது. திமுகவின் 2 தொகுதியையும் அதிமுக கைப்பற்றியதை தலைமையால் ஜீரணிக்க முடியவில்லை.
அதனால், எப்போதும் அந்த மாவட்டங்களுக்கே எந்த திட்டமும் செல்லக்கூடாது, அப்படி எதுவும் கிடைக்கவில்லை என்றால், நீங்கள் ஓட்டு போட்டு வெற்றி பெற்றவர்கள் உங்களை ஏமாற்றிவிட்டனர் என்றெல்லாம் கூறி சட்டசபை தேர்தலில் வெற்றி பெற முடிவு செய்ததாம்.
விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளை உள்ளடக்கிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டுள்ளதால், அதை சாதகமாக பயன்படுத்தியது திமுக.
ஏற்கனவே இருந்த இட ஒதுக்கீடு காரணத்தை புறம் தள்ளிவிட்டு, புதிய மாவட்டங்களில் வார்டு மறுவரையறை செய்யவில்லை என்று அவசர வழக்கு தொடுத்து தடை பெற்றுள்ளது.
தேர்தலில் தோற்கடித்த விழுப்புரம், நெல்லை மாவட்டங்கள் உட்பட காஞ்சிபுரம், வேலூர், தென்காசி, கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 9 மாவட்டங்களுக்கும் தடை வாங்கி, ஓட்டு போடாத மக்களை பழி வாங்கியதாக பேசிக்கொள்கிறார்கள்.
அதிலும், பாமக ஓட்டு வங்கி உள்ள வட மாவட்டங்களே அதிகம் இதில் உள்ளதால், கல்லில் இரண்டு ” மாங்காய்” என்று குஷியில் இருக்காங்களாம். ஊடகங்கள் தங்களுக்கு சாதகமாக இருப்பதால் இதெல்லாம் மக்களுக்கு தெரிய போவதில்லை. அதனால், வரும் தேர்தலில் மிகப்பெரிய ஓட்டு அறுடை செய்ய காத்திருப்பதாக திமுக ஆதரவாளர்கள் பேசிக் கொள்கின்றனர்.
உள்ளாட்சித்தேர்தல் #திமுக #அதிமுக #பாமக