திமுகவிற்கு உச்சத்தில் இருக்கும் ராகு கேது! அடுத்தடுத்த நிகழ்வுகளால் அமைதியான அறிவாலயம்!!
கடந்த இரு தினங்களாக திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அடுத்தடுத்து இறந்த சம்பவம் திமுக கட்சியினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. யாரும் எதிர்பாராமல் நிகழ்ந்த சம்பவத்தால் திமுக தலைவர் ஸ்டாலின் பல்வேறு நிகழ்வுகளை ரத்து செய்துள்ளார்.
தமிழகத்தில் அசைக்கமுடியாத மிகப்பெரும் எதிர்க்கட்சியாக திமுக இருந்து வருகிறது. சிஏஏ மற்றும் மக்களுக்கான பல்வேறு போராட்டங்களில் திமுக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், சென்னை திருவொற்றியூர் தொகுதி எம்எல்ஏ கே.பி.பி.சாமி உடல்நலக்குறைவால் காலமானார். அவரின் இறப்பு திமுக தொண்டர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இதனையடுத்து, 2019 ஆம் ஆண்டு குடியாத்தம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற காந்தவராயன் எம்எல்ஏ தற்போது காலமாகியுள்ளார். கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் அடுத்தடுத்து இறந்த சம்பவம் அறிவாலயத்தில் சோகமாக அமைதியை உண்டாக்கியுள்ளது.
இதைப்போலவே, திமுக வின் பொதுச் செயலாளர் அன்பழகன் சில நாட்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தற்போது எந்த ஒரு முன்னேற்றமும் இல்லாமல் இருந்து வருவதாக மருத்துவமனை சார்பில் கூறப்படுகிறது. இதனால், ஸ்டாலின் தலைமையில் பிப்ரவரி 29 (நாளை) ஆம் தேதி நடக்கவிருந்த திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற வருத்தமான சம்பவங்களின் காரணமாக திமுகவின் பலம் குறைந்து கொண்டே வருவது குறிப்பிடத்தக்கது.