லஞ்சம் வாங்கிய போது கையும் களவுமாக சிக்கிய திமுக செயலாளர்! சேலம் அருகே நடந்த பரபரப்பு சம்பவம்!

Photo of author

By Rupa

லஞ்சம் வாங்கிய போது கையும் களவுமாக சிக்கிய திமுக செயலாளர்! சேலம் அருகே நடந்த பரபரப்பு சம்பவம்!

தற்பொழுது திமுக தமிழகத்தில் ஆட்சி பெற்று பல திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. ஒரு பக்கம் திமுக பிரமுகர்கள் பலர் அராஜகம் செய்து வருகின்றனர். திமுக ஆட்சியில் இருப்பதை வைத்துக் கொண்டும் பலர் ரவுடிசம் செய்தும் வருகின்றனர். அந்தவகையில் சினிமா பட பாணியில் சேலம் அருகே தற்பொழுது ஒரு சம்பவம் அரங்கேறி உள்ளது.சேலம் மாவட்டத்தில் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் பேருந்து ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர் களை வேறு ஒரு ஊருக்கு மாற்றி விடுவதாக தொழிற்சங்க நிர்வாகிகள் லஞ்சம் கேட்டு வருவதாகவும் பலரை மிரட்டி வருவதாகவும் தொடர்புகள் வந்தது.

இவ்வாறு புகார்கள் வந்த நிலையில் மானத்தாள் கிராமத்தை சேர்ந்தவர்தான் பரமசிவம்.இவர் தாரமங்கலத்தில் இருந்து திருவாரூர் செல்லும் அரசுப் பேருந்தில் ஓட்டுனராக பணியாற்றி வருகிறார்.இவரிடம் தொழிலாளர் முன்னேற்ற சங்கம் செயலாளர் குணசேகரன் என்பவர் ரூ 5 ஆயிரம் லஞ்சம் தர வில்லை என்றால் வேறு ஒரு ஊருக்கு மாற்றம் செய்து விடுவோம் என்று மிரட்டி உள்ளார். குணசேகரன் இவ்வாறு மிரட்டியதை அடுத்து பரமசிவம் குணசேகரன் மீது லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளித்து உள்ளார். லஞ்ச ஒழிப்பு துறையினர் குணசேகரனை கையும் களவுமாக பிடிக்க திட்டமிட்டுள்ளனர்.

திட்டமிட்டு, பேருந்து ஓட்டுனர் பரமசிவம் சென்ற போது ரசாயன பவுடர் தடவிய 5 ஆயிரம் ரூபாயை கொடுத்து அனுப்பினர். பரமசிவனிடம் லஞ்ச ஒழிப்பு துறையினர், நான் லஞ்சம் தருகிறேன் வாருங்கள் என்று அழைக்குமாறு கூறியுள்ளனர். அதேபோலவே பரமசிவம் குணசேகரன் பணம் தருவதாக கூறி அழைத்து உள்ளார். குணசேகரனும் லஞ்சத்தை வாங்க தாரமங்கலம் தப்ப குளத்திற்கு மதிய நேரம் வந்துள்ளார். அச்சமயத்தில் மறைந்திருந்த போலீசார் குணசேகரனை கையும் களவுமாக பிடித்தனர்.

குணசேகரனின் பிடித்த கையோடு தாரமங்கலம் கிராம நிர்வாக அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் பணிமனை மேலாளர் ஆகியோரிடம் 5 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின் முடிவில் குணசேகரன் லஞ்சம் வாங்கியது உறுதியானது. பின்பு அவர் கைது செய்யப்பட்டார். திமுக அதிகாரியே இவ்வாறு ஊழியரை மிரட்டி லஞ்சம் வாங்கியது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இதற்கு திமுக எந்த விதத்தில் நடவடிக்கை எடுக்கும் என மக்கள் பரபரப்பாக பேசி வருகின்றனர்.