எங்கேயோ போற மாரியாத்தா என் மேல வந்து ஏறத்தா!!என்ற வசனத்திற்கு விளக்கம் அளித்தார் திமுகவின் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி!!
அதிமுக மோதலுக்கும் திமுகவிற்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது. அதிமுக அழிவிற்கு திமுக மகிழ்ச்சி அடையாது. மேலும் அதிமுக பொதுக்குழு மற்றும் ஒற்றை விவகாரத்தில் வீணாக திமுகவை வம்பு இழுக்க வேண்டாம். இதைத்தொடர்ந்து அதிமுக செய்த அனைத்து காரியங்களையும் பொதுமக்களுக்கு எடுத்துக்காட்டிய ஊடகங்களுக்கு தனிப்பட்ட முறையில் எங்களது நன்றி மற்றும் பாராட்டுக்கள்.
திமுகவை வம்பு இழுப்பதே எடப்பாடி பழனிசாமியின் போக்காக உள்ளது. பின்னாடி திமுக இருப்பதாக எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். நாங்கள் யார் பக்கமும் செல்லவில்லை. எங்களுக்கு அப்படிப்பட்ட எண்ணமும் தோன்றாது. அதிமுகவுக்கு எந்த பிரச்சனை வந்தாலும் முதலில் முதலமைச்சரையும் பின்னர் திமுகவையும் குறை சொல்வதே எடப்பாடி பழனிசாமிக்கு வழக்கமாகிவிட்டது.
யார் மீதோ உள்ள கோபத்தை திமுகவின் பக்கம் எடப்பாடி பழனிசாமி காட்டி வருகிறார். இதேபோன்று வருமான வரி சோதனையிலும் கண்டிக்க தெம்பு இல்லாமல் திமுகவினரை குற்றம் கூறி வந்திருக்கிறார். தவறு இழைத்தவர்கள் தான் எப்போதும் நியாயம் இருக்கும் நபர்களிடம் குறை கூறுவார்கள் அதே போல் தான் எடப்பாடி பழனிசாமி அவர்களும் செய்து வருகிறார்.
தன்னிடத்தே உள்ள தவறை சரி செய்யாமல் அடுத்தவரை குறை சொல்லவதே வாடிக்கையாகிவிட்டது.இவர்களின் செயலைக் கண்டு தான் சட்ட ஒழுங்கு காரணமாக அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டது. எந்த நேரத்தில் எதை செய்ய வேண்டும் என காவல் துறையினருக்கு தெரியாதா? என்று கேள்வி எழுப்பினார். ஆர். எஸ்.பாரதி.