திமுக பேச்சாளர் மனைவி தூக்கிட்டு தற்கொலை! தற்கொலையின் பின்னணி!

Photo of author

By Kowsalya

திமுக செய்தி தொடர்பு இணை செயலாளர் பொறுப்பில் உள்ள தமிழன் பிரசன்னா அவர்களின் மனைவி இன்று காலையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

சென்னையில் உள்ள எருக்கஞ்சேரி இந்திரா நகரில் தமிழன் பிரசன்னா, மனைவி, குழந்தைகள் வசித்து வந்தனர். தமிழன் பிரசன்னா திமுக செய்தி தொடர்பு இணை செயலாளர் பொறுப்பில் உள்ளார். இவர் ஒரு வழக்கறிஞர். இவர் மிகச்சிறந்த பேச்சாளர் என்பது அனைவருக்கும் தெரியும். இவரது மனைவி நதியா. இவருக்கு திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளன.

இந்நிலையில் இன்று காலை 10 மணி அளவில் இவரது மனைவி நதியா தூக்கில் தொங்கியபடி சடலமாக கிடந்துள்ளார்.

தகவலறிந்த கொடுங்கையூர் காவல் நிலைய போலீசார் விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணையை தொடங்கினர். தமிழன் பிரசன்னா அவர்கள் அருகில் உள்ள கொடுங்கையூர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அந்த விசாரணையில் இறந்து போன நதியாவிற்கு இன்று பிறந்தநாள் என்றும், அதை விமர்சையாக கொண்டாட வேண்டும் என்று அவர் பிரசன்னாவிடம் கேட்டுகொண்டு இருந்துள்ளார், இதற்கு பிரசன்னா மறுப்பு தெரிவித்துள்ளார். கொரோனா ஊரடங்கு காலத்தில் விமர்சையாகக் கொண்டாடுவது எப்படி? என்று அவர் மறுத்துள்ளார். இதனால் இருவருக்கு இடையே சண்டை ஏற்பட்டுள்ளது.

இதனால் சண்டையின் உச்சத்திற்கு சென்ற நதியா மனமுடைந்து தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார். கடந்த சில நாட்களாகவே குடும்ப சண்டையும் நடந்துள்ளது என விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் போலீசார் பல கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.