நடிகர் விஜய் தமிழக வெற்றிக்கழகம் என்னும் கட்சியை ஆரம்பித்து இதுவரை ஒரு கோடிக்கும் அதிகமான உறுப்பினர்களை தவெக கட்சியில் இணைத்து விட்டார். நாளுக்கு நாள் விஜய் கட்சியில் சேரும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. அதேபோல தமிழகத்தில் ரொம்ப வீக்கான நிலையில் இருந்த பாஜகவும் தங்கள் கட்சியில் உறுப்பினர்களை சேர்க்கும் பணியை ஆரம்பித்து விட்டனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்கள் உள்ள நிலையில் இப்போதே மக்களை சந்திக்கும் சுற்றுப்பயணத்தை ஆரம்பித்துவிட்டார். இதனால் திமுகவினர் கலக்கத்தில் உள்ளனர். எனவே நமக்கு உண்மையா எத்தனை ஒட்டு கிடைக்கும் என்பதை அறிய ஓரணியில் இணைவோம் என்னும் திட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
மக்களின் வீட்டுக்கு சென்று நீங்க திமுகவிற்கு ஓட்டு போடுவீர்களா என்று கேட்டு அவர்களை திமுக உறுப்பினராக கட்சியில் இணைக்கிறார்கள். நிறைய இடங்களில் மக்கள் தங்களை திமுக கட்சியில் இணைத்துக் கொள்ள விரும்பவில்லை. அதனால் வீடு தேடி வரும் திமுகவினரை மக்கள் மதிப்பதில்லை, புறக்கணித்து வருகின்றனர்.
உங்க ஆதார் எண், OTP கொடுங்க, இல்லைன்னா அரசின் திட்டங்கள், அரசின் சலுகைகள் உங்களுக்கு கிடைக்காது என்று செல்லமாக திமுகவினர் மக்களை மிரட்டுவதாக செய்திகள் வெளிவந்துள்ளன. மக்களை மிரட்டுவது, மக்களை மிரட்டி ஆதார் OTP பெறுவது தவறு என்றும், ஆதார் OTP கொடுப்பதன் மூலம் ஒரு மனிதனின் தனிப்பட்ட டேட்டா பெறமுடியும் என்றும், ஐ டி சட்டம் பிரிவு 66சி படி இது குற்றம் என்றும் அதிமுக வழக்கறிஞர் இன்பதுரை தகவல் வெளியிட்டுள்ளார்.