‘பபூன், மெயின் ரோடு’ சீனியர் அமைச்சர்களை சீண்டிய உதயநிதி! கொந்தளிப்பில் அதிமுக தொண்டர்கள்!

0
159
udhayanidhi
udhayanidhi

மதுரையில் அமைந்த எய்ம்ஸ் மருத்துவமனையை கையோடு எடுத்து வந்ததாக கூறி பாளையங்கோட்டையில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 11 நாட்களே இருக்கும் நிலையில் தேர்தல் பிரச்சாரத்தில் இரவு, பகலான வேட்பாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக நெல்லை மாவட்டம் பாளையங்கங்கோட்டையில் திமுக சார்பில் போட்டியிடும் அப்துல் வகாபை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்பொழுது பேசிய உதயநிதி மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை விமர்சித்ததுடன், ஜிஎஸ்டி வரிக்கும், புதிய நாடாளுமன்றம் கட்டப்படுவதற்கும் அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

தொடர்ந்து பேசிய உதயநிதி ஸ்டாலின், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர் இல்லை என்றும், ஜெயலலிதாம், சசிகலா என இருவருக்கும் துரோகம் செய்தவர் என்றார். மதுரை எயிம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் மட்டும் நாட்டப்பட்டதை சுட்டிக்காட்டும் விதமாக கையில் ஒரு செங்கல்லை எடுத்து வந்து ”மதுரை எயிம்ஸ் மருத்துவமனையை நான் கையோடு எடுத்து வந்து விட்டேன். அங்கு ஒரே ஒரு செங்கல் தான் இருந்தது. அதையும் நான் எடுத்து வந்ததால் எயிம்ஸ் மருத்துவமனை எங்கே என அவர்கள் தேடுவார்கள்” கூறினார்.

செங்கல்லை காட்டி எயிம்ஸ் மருத்துவமனையை எடுத்து வந்ததாக கூறியது மட்டுமின்றி ஒவ்வொரு அமைச்சருக்கும் செல்லப்பெயர் இருப்பதாக கூறி அனைத்த அமைச்சர்களையும் படுகேவலமாக விமர்சித்தார். தெர்மாக்கோல் என்றால் செல்லூர் ராஜூ என்றும், பஃபூன் என்றால் ராஜேந்திர பாலாஜி எனவும், குட்கா என்றால் விஜயபாஸ்கர் எனவும், மெயிண்ட்ரோடு என்றால் ஜெயக்குமார் எனவும், பாமயில் என்றால் எம்.ஆர்.விஜயபாஸ்கர் எனவும் கலாய்த்தார்.

Previous articleஷகீலாவின் திருநங்கை மகள் நடிகரா..? – பிரபல சீரியலில் நடித்த புகைப்படம் வைரல்
Next articleசிக்கியது சரியான ஆதாரம்! ஸ்டாலினுக்கு கிடுக்குப்பிடி போட்ட டிடிவி தினகரன் கதறும் திமுக தலைமை!