சிக்கியது சரியான ஆதாரம்! ஸ்டாலினுக்கு கிடுக்குப்பிடி போட்ட டிடிவி தினகரன் கதறும் திமுக தலைமை!

0
121

கடந்த 2006ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தலில் திமுக அபார வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்தது அப்போதைய திமுக தலைவர் கருணாநிதி முதலமைச்சராக பொறுப்பேற்றார்.ஆனால் அந்த தேர்தல் நடந்து முடிந்த பின்னர் தேர்தலுக்கு முன்னர் மக்களிடம் திமுகவிற்கு இருந்த நற்பெயர் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஏனென்றால் தேர்தலுக்குப் பின்னர் திமுகவின் போக்கு கொஞ்சம் கொஞ்சமாக மாறத் தொடங்கியது.என்னதான் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வெற்றி பெற்றிருந்தாலும் தனிப்பெரும்பான்மை அளவிற்கு திமுக அந்த தேர்தலில் பலம் பெற்று ஆட்சியில் அமரவில்லை.ஆகவே அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதா திமுகவை மைனாரிட்டி திமுக அரசு என்றுதான் சொல்வார்.

இந்த நிலையில், நாட்கள் செல்ல செல்ல திமுகவின் உண்மை முகம் மக்களுக்கு தெரிய ஆரம்பித்தது. காய்கறிகள் உட்பட அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தும் பொது மக்களால் நெருங்க கூட முடியாத அளவிற்கு விலை உயர்ந்து நின்றது.இதனால் செல்லுமிடமெல்லாம் திமுகவிற்கு எதற்காக வாக்களித்தீர்கள் என்று வியாபாரிகள் பொதுமக்களிடம் கேட்கும் அளவிற்கு மோசமாகிவிட்டது திமுக நிலைமை.போதாக்குறைக்கு திமுக ஆட்சிக்கு வந்த நாள் முதலே தமிழகத்தில் தொடர்ந்து காலை 4 மணி நேரம் மதியம் 2 மணி நேரம் இரவு இரண்டு மணி நேரம் என்று மொத்தமாக ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம் மின்சார தடை ஏற்பட்டது.

இந்த மின்வெட்டு என்றது அடுத்து திமுக ஆட்சியில் இருந்த கடைசி நொடி வரை தொடர்ந்த காரணத்தால், தமிழக மக்களிடையே திமுகவிற்கு இருந்த கொஞ்ச நஞ்ச நற்பெயரும் சுத்தமாக கெட்டுப்போனது.இதற்கிடையில் கடந்த 2009ஆம் ஆண்டு இலங்கையிலே ஈழத் தமிழர்கள்மீது இலங்கை ராணுவம் கொலைவெறி தாக்குதலை நடத்தியது.

அதில் லட்சக்கணக்கான இலங்கை தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.இவற்றையெல்லாம் அமைதியாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த முதலமைச்சர் கருணாநிதியும், கூட்டணியில் அங்கம் வகித்த மத்திய காங்கிரஸ் அரசும் தமிழர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்க மறுத்துவிட்டது.

ஆனால் முதலமைச்சர் கருணாநிதி ஏதோ ஒப்புக்கு உண்ணாவிரத போராட்டம் இன்று ஒன்றை நடத்தி விட்டு பேசாமல் இருந்துவிட்டார். விளைவு இலங்கையிலே இலங்கை தமிழர்கள் கொத்துக் கொத்தாக கொல்லப்பட்டனர். அதோடு விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனும் இலங்கை இராணுவத்தால் கொல்லப்பட்டதாக சொல்லப்படுகிறது.அதோடு கடந்த 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் தமிழக மக்களுக்கு திமுக மீது இருந்த வெறுப்புணர்வு வெளிப்படையாகவே தெரியவந்தது. அந்தத் தேர்தலில் திமுக படுதோல்வியை சந்தித்தது. எதிர்க்கட்சியாக வருவதற்கு கூட தகுதி இல்லை என்ற நிலைக்கு தள்ளப்பட்டது திமுக.

அதனைத் தொடர்ந்து கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலிலும் திமுகவால் தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க முடியவில்லை அதனால் சோர்ந்துபோன கருணாநிதி படுத்த படுக்கையாகி விட்டார்.அதன்பின்பு அடுத்த 2 வருடங்களில் அதாவது கடந்த 2018ஆம் ஆண்டில் கருணாநிதி உயிரிழந்தார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சமயத்தில் பல்வேறு செய்திகள் வெளியிடப்பட்டன. ஆனால் எது உண்மை எது பொய் என்று பொதுமக்களுக்கு தெரியாமல் போய்விட்டது.

இந்த நிலையில், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பாக எங்கள் தலைமையில் ஆட்சி அமைந்தவுடன் கருணாநிதியின் மரணம் தொடர்பாக விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு உண்மை வெளிக்கொண்டு வரப்படும் என்று தெரிவித்திருக்கிறார் டிடிவி தினகரன்.

ஜெயலலிதாவின் மரணம் மர்மமான முறையில் நிகழ்ந்திருக்கிறது. அந்த மரணம் தொடர்பான விசாரணையை திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நடத்தி குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் மேடைக்கு மேடை தெரிவித்து வருகிறார்.இந்த நிலையில், கருணாநிதியின் மரணத்தில் சந்தேகம் இருக்கிறது அவருடைய மரணம் தொடர்பான விசாரணையை தனி ஆணையம் மூலம் மேற்கொண்டு காரணமானவர்களுக்கு தண்டனை அளிக்கப்படும் என்று டிடிவி தினகரன் தெரிவித்திருப்பது ஸ்டாலினை அதிர்ச்சியடைய வைத்து இருப்பதாக சொல்கிறார்கள்.