ஆட்சிக்கு வந்து இரண்டரை மாதங்களிலேயே ஸ்டாலினுக்கு கிடைத்த பெருமை!

Photo of author

By Sakthi

ஆட்சிக்கு வந்து இரண்டரை மாதங்களிலேயே ஸ்டாலினுக்கு கிடைத்த பெருமை!

Sakthi

Updated on:

சென்னையில் இருக்கின்ற ஆவடியில் அமைச்சர் நாசர் தலைமையில் நடந்த சட்டசபைத் தொகுதி அலுவலக திறப்பு விழாவில் சட்டசபை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார். சட்டசபை தொகுதி அலுவலகம் திறப்பு விழா நடந்து முடிந்ததும் அங்கே இருந்த தொண்டர்களிடையே உதயநிதி உரையாற்றியிருக்கிறார்.

இதுகுறித்து அவர் பேசியதாவது நோய்த்தொற்று தடுப்பூசியை எல்லோரும் தயக்கமின்றி போட்டுக்கொள்ள வேண்டும், நாட்டிலேயே சிறந்த முதலமைச்சர் யார் என்று ஓர் மக்ஸ் என்ற நிறுவனம் நடத்திய ஆய்வில் தமிழகத்தின் முதலமைச்சர் ஸ்டாலின் சிறந்த முதலமைச்சர் என்ற இடத்தில் இருக்கின்றார் என்று தெரிவித்து இருக்கிறார் உதயநிதி ஸ்டாலின்.

மாதத்திற்கு ஒருமுறை நடத்தப்படும் இந்த ஆய்வில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தின் முதலமைச்சராக ஸ்டாலின் பொறுப்பேற்று இரண்டரை மாதங்கள் தான் ஆகி இருக்கின்றது. இந்த மாதத்திற்கான சிறந்த முதலமைச்சர்களின் பட்டியலில் முதலிடத்தில் ஸ்டாலின் இருந்து வருகிறார் என்று தெரிவித்து பெருமைப்பட்டார் உதயநிதி. இதற்கு முன்னதாக பூந்தமல்லி சட்டசபைத் தொகுதியில் அலுவலகத்தை உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்திருக்கிறார்.