நேருக்கு நேர் சந்திக்கும் இமயமும் சிகரமும்! பரபரப்பில் தமிழக அரசியல் களம்!

0
90

தமிழ்நாட்டிலே எதிர்வரும் ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறவிருக்கிறது. மிகக்குறைந்த தினங்களே தேர்தலுக்கு இருக்கும் சமூக காரணத்தால் தமிழகத்தில் எல்லா அரசியல் கட்சிகளும் பரபரப்பாக செயல்பட்டு வருகின்றன. அந்த விதத்தில் இன்றைய தினம் தேர்தல் வேட்பு மனுத்தாக்கல் தொடங்கி இருக்கிறது.

தேர்தல் வேட்புமனு தாக்கல் தொடங்கிய அந்த நிமிடத்தில் இருந்து பரபரப்பாக வேட்புமனுத்தாக்கல் நடைபெற்று வருகிறது. அதே சமயத்தில் இன்றைய தினம் திமுக சார்பாக வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டிருக்கிறது. ஆகவே அதுவும் வேட்புமனுத்தாக்கல் போலவே தமிழக மக்களால் கண்காணிக்கப்பட்டு வருகின்றது இப்படி நடைபெறவிருக்கும் தேர்தலை முன்னிட்டு தமிழகமே பரபரப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

நிலவரம் இவ்வாறு இருக்கையில், ஆதிமுக திமுக என்ற இரு கட்சிகளுமே எவ்வாறு எதிர்வரும் தேர்தலில் தன் எதிரணியை எவ்வாறு வெற்றி கொள்ளலாம் என்பதில் மும்முரமாக யோசித்து வருகிறார்கள். அந்த வகையில், கடந்த சட்டசபைத் தேர்தலின்போது அதிமுக வேட்பாளர்கள் அனேக இடங்களில் திமுகவை நேரடியாக எதிர்கொள்ளவில்லை என்று சொல்கிறார்கள். அதன் காரணமாகவே அதிமுக சென்ற சட்டசபைத் தேர்தலில் அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்தது என்றும் தெரிவிக்கிறார்கள்.

சென்ற சட்டசபை தேர்தலில் அதிமுக மொத்தமாக 139 இடங்களில் வெற்றி பெற்று இருந்தாலும் அனேக இடங்களில் அதிமுக திமுகவை நேரடியாக எதிர் கொள்ளவில்லை என்றுதான் சொல்கிறார்கள். அவ்வாறு நேரடியாக எதிர்கொண்டு இருந்தாலும் அதிக வாக்கு சதவீதத்தில் வெற்றி பெறவில்லை நூலிழையில் தான் அதிமுக வெற்றி பெற்றதாக தெரிவித்தார்கள்.

அந்த வகையில், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பாணியை அப்படியே கடைபிடித்து வருகிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி என்று சொன்னாலும் இந்த விஷயத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சற்று மாற்றி சிந்தித்து இருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். அதன் காரணமாக எதிர்வரும் சட்டசபை தேர்தலில் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் அதிமுகவும் திமுகவும் நேரடியாக சந்திக்க இருக்கிறது.

இப்போது இருக்கும் அரசியல் சூழ்நிலையில் அதிமுகவும் சரி, திமுகவும் சரி, நிச்சயமாக வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற ஒரு கட்டாயத்தில் இருக்கிறது. ஏனென்றால் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உயிரிழந்த பின்பு பதவிக்கு வந்த எடப்பாடி பழனிச்சாமி சுமார் நான்கரை ஆண்டு காலமாக வெற்றிகரமாக முதல்வராக அதிமுகவை வழிநடத்தி வந்திருக்கிறார். ஆனால் ஜெயலலிதா என்ற மிகப் பெரிய ஆளுமை இல்லாமல் அதிமுக சந்திக்கப்போகும் பொதுத் தேர்தல் எதிர்வரும் சட்டசபை தேர்தல் ஒருவேளை திமுக இந்த தேர்தலில் வெற்றி பெறாவிட்டால் அடுத்த 5 ஆண்டுகளில் அதிமுக காணாமல் போய்விடும் என்று தெரிவிக்கிறார்கள்.

மறுபுறம் திமுகவை எடுத்துக்கொண்டால் கடந்த 2011ஆம் ஆண்டு வெற்றியை அதிமுகவிடம் பறிகொடுத்து கடந்த பத்து வருடங்களாக எதிர்க்கட்சி ஆகவே தான் இருந்துவந்திருக்கிறது அதிலும் கடந்த 2011 ஆம் ஆண்டு எதிர்க்கட்சியாக கூட வரமுடியாமல் திண்டாட்டத்தில் இருந்துவந்தது. கடந்த 2011ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலின் போது அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற தேமுதிக எதிர்க்கட்சியாக அமர்ந்தது. அந்தத் தேர்தலில் திமுக மிக மோசமான ஒரு தோல்வியை சந்தித்தது.

அதன்பிறகு கடந்த 2016ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் அதிமுக மறுபடியும் அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. ஆனால் கடந்த 2011ஆம் ஆண்டு எதிர்க்கட்சியாக அமர்வதற்கு கூட வழியில்லாமல் போன திமுகவிற்கு இந்த சட்டசபை தேர்தல் சற்று ஆறுதலாக அமைந்தது. திமுக சுமார் 87 இடங்களில் வெற்றி பெற்று பலம்வாய்ந்த எதிர்க்கட்சியாக சட்டசபைக்குள் நுழைந்தது.

கடந்த பத்து வருட காலமாக திமுக ஆட்சிக்கு வர இயலாமல் தவித்துக் கொண்டிருந்ததற்கு காரணம் ஜெயலலிதா என்ற மிகப்பெரிய ஆளுமையின் புத்திசாதுரியம் தான் என்றால் அது மிகையாகாது.ஏனென்றால், எந்த தொகுதியில் அதிமுகவின் வேட்பாளர்களை எவ்வாறு நிறுத்த வேண்டும் என்பதை கனகச்சிதமாக கணித்து அவர்களை வெற்றி பெற வைத்து தன்னுடைய புத்தி சாதுரியத்தால் இரண்டு சட்டசபை தேர்தலில் மிகப்பெரிய வெற்றி அடைந்தவர் ஜெயலலிதா என்பதில் ஐயமில்லை.ஆனால் தற்போதைய தேர்தலில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட தொகுதிகளில் அதிமுக திமுக ஆகிய இரு கட்சிகளுமே நேரடியாக சந்தித்துக் கொள்வது ஒரு மிகப்பெரிய பலப்பரிட்சையாக பார்க்கப்படுகிறது.

ஆகவே ஆளும் கட்சி எதிர்கட்சி என்பதை கடந்து மக்களின் ஆதரவு எந்த கட்சிக்கு இருக்கிறது என்பதை முடிவு செய்யும் ஒரு தேர்தலாக எதிர்வரும் சட்டசபைத் தேர்தல் இருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. அதே வேளையில் கருணாநிதி, ஜெயலலிதா ஆகிய இரு அறிமுகமே இல்லாத சூழ்நிலையில் அடுத்ததாக இந்த இரு கட்சிகளில் எந்தக் கட்சி நிலைத்து நிற்கப் போகின்றது என்பதை முடிவு செய்யும் ஒரு முக்கிய தேர்தலாக எதிர்வரும் சட்டசபைத் தேர்தல் இருக்கும் என்பதே அரசியல் நோக்கர்களின் கருத்தாக இருந்து வருகிறது.