திமுக மற்றும் அதிமுக இரு கட்சிகளும் தங்களின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை இன்று ஒரே நாளில் நடத்துகின்றனர். வரப்போகும் 2026 ஆம் ஆண்டின் சட்டமன்றத் தேர்தலை எப்படி எதிர்கொள்வது எதிர்க்கட்சியை வீழ்த்த கையில் எடுக்கும் யுக்திகள் கூட்டணி கட்சி இணைப்பு உள்ளிட்டவற்றை பேச உள்ளனர்.
அதிமுக
குறிப்பாக அதிமுகவில் கூட்டணி கட்சிகள் சிதறிய நிலையில் வாக்கு வங்கியை எப்படி மீட்டெடுப்பது என்பது குறித்து முக்கிய பேச்சுவார்த்தை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் கட்சியிலிருந்து வெளியேறிய ஓபிஎஸ் தினகரன் சசிகலா உள்ளிட்டோர்களில் யாரேனும் மீண்டும் இணைய எடப்பாடி வாய்ப்பு கொடுப்பாரா என்று பெரிய கேள்வியாக உள்ளது.
அதேபோல திமுக மீது அதிருப்தியில் உள்ள கூட்டணி கட்சியான காங்கிரஸ் மற்றும் விடுதலை சிறுத்தை கட்சிகள் அதிமுகவில் இணைய அதிக வாய்ப்புள்ளதாகவும் கூறுகின்றனர். வரப்போகும் சட்டமன்றத் தேர்தலில் திமுகவின் கூட்டணியிலிருக்கும் கட்சிகள் அதிமுகவிற்கு வருவதற்கான வாய்ப்புகள் அதிகளவு இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் பேசி வருகின்றனர்.
அதேபோல பாமக இந்த பாராளுமன்ற தேர்தலில் அதிமுகவின் கூட்டணியை முறித்து பாஜகவுடன் இணைந்தது. ஆனால் அவ்வாறு இனனைந்ததன் விளைவு பாமக-வின் பெருமான்மையான தொகுதியில் வெற்றி பெறவில்லை. இதற்கு அண்ணாமலை முக்கிய காரணம். வரப்போகும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக-வுடன் இணைய அதிக வாய்ப்புள்ளதாகவும் கூறுகின்றனர்.
திமுக
இம்மாதம் இறுதியில் முதல்வர் ஸ்டாலின் அமெரிக்கா செல்ல உள்ளதால் அதற்கு முன்னதாகவே தனது மகனை துணை முதல்வர் அரியணையில் ஏற்ற பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று கூறுகின்றனர். அதுமட்டுமின்றி வரப்போகும் சட்டமன்ற தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு குறைந்த பட்ச சீட்டுகள் ஒதுக்கவும் திட்டமிட்டுள்ளனர். அவ்வாறு குறைந்தபட்ச சீட் ஒதுக்கும் பொழுது வெளியேறப்படும் கட்சிகளின் வாக்கு வங்கியை ஈடுகட்டும் வகையில் வேறு கூட்டணி அமைப்பது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படுவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.