சமூக நீதி என்றால் என்னவென்று கேட்பார்கள் திமுகவினர்!! அதிமுக முன்னாள் அமைச்சர் நெத்தியடி!!
திமுகவினருக்கு சமூக நீதி பற்றி ஒன்றும் தெரியாது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
தற்போது திமுக இளைஞர் நலன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடித்த மாமன்னன் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கிறது. பல்வேறு தரப்பினரும் அதைப்பற்றி கருத்துக்கள் தெரிவித்து வரும் நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரும் அதைப்பற்றி பேசியுள்ளார்.
சென்னையில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் அவர் கூறியதாவது,
உதயநிதி ஸ்டாலின் நடித்த மாமன்னன் படத்தை அவர்களது கட்சியைச் சார்ந்தவர்கள் மட்டுமே பார்த்து வருகின்றனர். வேறு யாரும் பார்ப்பதில்லை. சமூக நீதியை பற்றி பேச திமுகவிற்கு என்ன தகுதி இருக்கிறது?? . அவர்கள் சமூக நீதி பற்றிய படங்களில் நடிப்பதற்கு? என கேள்வி எழுப்பினார்.
சமூகத்தில் பின்தங்கிய ஆதிதிராவிட மக்களுக்கு கட்சியிலும் ஆட்சியிலும் ஒரே மாதிரியான நிலைப்பாடை வழங்கியது அதிமுக கட்சிதான். அதிமுக கட்சி ஆட்சியில் அவர்களுக்கு முழுமையான முக்கியத்துவம் வழங்கப்பட்டிருந்தது.
சமூக நீதியை பற்றி பேச அதிமுகவினருக்கு தகுதி இருக்கிறது. ஏனெனில் சமூக நீதியை முழுமையாக நிலைநாட்டியவர்கள் மறைந்த முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்கள். ஜெயலலிதா அவர்கள் ஆட்சியில் இருந்த பொழுது ஆதிதிராவிடரை பொது தொகுதியில் நிற்க வைத்து கட்சியில் சமூக நீதியை நிலைநாட்டினார். ஆனால் திமுக அதை செய்ததா??
சொந்த கட்சியிலேயே சமூக நீதியை நிலைநாட்டாதவர்கள் சமூக நீதி திராவிட மாடல், நாங்கள் தான் அனைத்திற்கும் சொந்தம் என்று கூறினால் மக்கள் அதை கண்டிப்பாக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று அவர் தெரிவித்தார்.