2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் துவங்கவும் திமுகவின் ஆட்சி காலம் இன்னும் 9 மாதங்கள் மட்டுமே இருக்கிறது என்றும் அதற்குப் பின் எதிர்க்கட்சியாக அமைவதற்கு கூட திமுக அரசு வெற்றி பெறாத என எதிர்க்கட்சித் தலைவர் ஆன பழனிச்சாமி தெரிவித்திருக்கிறார். மேலும் திமுகவின் கூட்டணி கட்சிகள் மிகப்பெரிய பிரிவை சந்திக்க இருப்பதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து சட்டசபை முடித்த வெளிவந்த பழனிச்சாமி அவர்கள் தெரிவித்திருப்பதாவது :-
பொதுவாக சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவருக்கும் எதிர் கட்சியினருக்கும் தான் பேசுவதற்கான பிரதான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் ஆனால் இங்கு ஆளும் கட்சிக்கு மட்டுமே பேசுவதற்கான வாய்ப்பு வழங்கப்படுவதாகவும் எதிர்கட்சியினரை மதிப்பதில்லை மற்றும் பேசுவதற்கான அனுமதி வழங்குவது இல்லை என்றும் பழனிச்சாமி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
இதற்காகத்தான் கருப்பு நிற சட்டை அணிந்து ஆளும் கட்சி தலைவர் மற்றும் சட்டசபை தலைவர் மு அப்பாவு உள்ளிட்டோரை எதிர்த்து அதிமுக தினார் போராட்டம் நடத்துவதாகவும் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் அதிமுகவின் கோரிக்கைகள் நிராகரிக்கப்படுவதாகவும், சட்டப்பேரவையில் இருக்கக்கூடிய மற்ற கட்சி உறுப்பினர்களுக்கு பேச அனுமதி வழங்கிய பின்னர் தான் நேரமில்லாத நேரத்தில் கடைசியாக அதிமுகவினருக்கு பேச வாய்ப்பளிக்கப்படுவதாகவும் ஆனால் அப்பொழுது கூட அதிமுகவினர் சொல்லக்கூடிய கருத்துக்களை சட்டசபை தலைவரும் ஆளும்கட்சியும் ஏற்றுக் கொள்வதில்லை என்று குற்றம் சாட்டியிருக்கிறார்.