சவுக்கு சங்கர் வழக்கு: எங்களை பற்றி பேசினால் உங்களுக்கும் இதுதான் கதி.. ஆளும் கட்சி விடுக்கும் மறைமுக அச்சறுத்தல்!!
இணைய வழி ஊடகங்கள் மூலம் அரசியல் குறித்து பல விமர்சனங்களை பேசி வந்த சவுக்கு சங்கர் பெண் காவல் அதிகாரிகள் குறித்து அவதூறாக பேசியதால் சில தினங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார். இவர் கைது செய்யப்பட்டது முதல் தற்பொழுது இவரை சார்ந்து நடக்கும் பல நடவடிக்கைகள் ஆளும் கட்சி தான் இதற்கு காரணம் என்பதை வெளிப்படை தன்மையுடன் காட்டுகிறது. இவரை கைது செய்யப்பட்டது மட்டுமின்றி இவர் ஊடகத்திற்கு பேட்டி அளித்த அந்நிறுவனத்தின் உரிமையாளரையும் தற்பொழுது கைது செய்துள்ளனர்.
இதனால் அனைத்து பக்கத்திலிருந்தும் ஆளும் கட்சிக்கு எதிராக பல எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. பத்திரிக்கை சுதந்திரம் குறித்து பேசும் திமுக தங்களை பற்றி பேசுபவர்களையும் எதிர்ப்பவர்களையும் இருக்கும் இடம் தெரியாமல் செய்து விட வேண்டும் என்று நினைக்கிறது. அந்த வகையில் தனது அதிகாரத்தையும் பதவியையும் இம்மாதிரியான நபர்களிடம் உபயோகிக்கின்றனர். பொதுமக்கள் மத்தியில் சவுக்கு சங்கர் அவதூறாக பேசியது குறித்து கைது செய்யப்பட்டாலும் இவர் மீது அடுத்தடுத்து குவியும் கஞ்சா வழக்கு வீட்டில் கஞ்சா கையெடுப்பு போன்ற அனைத்தும் சந்தேகப்படும் படியாக தான் உள்ளது.
தமிழகத்தில் கஞ்சா அதிகளவு ஊடுறுவதற்கு காரணமே ஆளும் கட்சி தான். பத்தாண்டு காலம் ஆட்சியில் காட்ட முடியாத அதிகாரத்தை தற்பொழுது காட்டி வருகின்றனர்.குறிப்பாக அவர்களை எதிர்க்கும் நபர்கள் மீதுதான் இவர்களின் தாக்குதல் பெரிதாகவே உள்ளது. தற்பொழுது சவுக்கு சங்கர் பேட்டியளித்த ரெட் பிக்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் பெலிக்ஸ் ஜெரால்டு கைது செய்தது குறித்து நாம் தமிழர் கட்சி சீமான் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.