டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 தேர்வு… இலவச பயிற்சி நாளை துவக்கம்!!

0
154
டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 தேர்வு… இலவச பயிற்சி நாளை துவக்கம் !!
டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 தேர்வுக்கான இலவச வீடியோ பயிற்சி நாளை அதாவது ஜூலை 24ம் தேதி தொடங்குகின்றது என்று தகவல் கிடைத்துள்ளது. இந்த இலவச வீடியோ பயிற்சி அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரி சார்பில் நடைபெறவுள்ளது.
தமிழக அரசின் முதன்மை பயிற்சி கல்வி நிறுவனமான அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரியானது ஏ.ஐ.எம்.என் என்ற யூடியூப் சேனல் நடத்தி வருகின்றது. இந்த யூடியூப் சேனல் மூலமாக போட்டித் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகளை இலவசமாக நடத்தி வருகின்றது. அடுத்த மாதம் டி.என்.பி.எஸ்.சி என்று அழைக்கப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 1 போட்டித் தேர்வுக்கான அறிவிப்பை வெளியிடவுள்ள நிலையில் இந்த போட்டி தேர்வை எழுத மாணவ மாடவிகள் அனைவரும் ஆர்வத்துடனும் எதிர்பார்ப்பிலும் உள்ளனர்.
இந்த குரூப் 1 போட்டி தேர்வை எழுதுவதற்கு தற்பொழுது இருந்தே மாணவ மாணவிகள் தயாராக வேண்டும். அவ்வாறு போட்டி தேர்வு எழுதவுள்ள நபர்களுக்கு உதவி செய்யும் முயற்சியாக அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரி தனது யூடியூப் சேனல் வழியாக போட்டித் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பை நடத்தவுள்ளது.
அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரி நடத்தும் இந்த இலவச வீடியோ பயிற்சி வகுப்பில் தினமும் மூன்று வீடியோ வீதம் 180 வீடியோக்கள் மற்றும் அதற்கான படக் குறிப்புகளுடனும் பதிவேற்றம் செய்யபடவுள்ளது. ஒவ்வொரு சனிக்கிழமையும் மாணவ மாணவிகள் அனைவரும் நோக்கம் எனும் செயலி மூலம் மாதிரித் தேர்வுகளை எழுதலாம். மாணவ மாணவிகள் எழுதிய தேர்வை அவற்றுக்கான விடைகளுடன் சரிபார்த்துக் கொள்ளும் வசதியும் இந்த செயலியில் உள்ளது.
பின்னர் ஒவ்வெரு ஞாயிற்றுக் கிழமையும் மதியம் 2.30 மணிக்கு வீடியோ பயிற்சியில் வகுப்பு எடுத்த ஆசிரியர்களுடன் ஆன்லைன் வழியாக  நேரடியாக தொடர்பு கொண்டு அவர்களுக்கு உள்ள சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளலாம். எனவும் தகவல் கிடைத்துள்ளது.
அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரி நடத்தும் குரூப் 1 தேர்வுக்கான இலவச வீடியோ பயிற்சி வகுப்பு நாளை அதாவது ஜூலை 24ம் தேதி காலை 8 மணிக்கு ஏ.ஐ.எம்.டிஎன் என்ற யூடியூப் சேனலில் தொடங்குகின்றது.
Previous articleஅமைச்சரை கட்டம் கட்டிய முதல்வர் ஸ்டாலின்! பதவியாவது தப்புமா? பதற்றத்தில் ஆதரவாளர்கள்..
Next articleஅரிசியின் விலை 3800 ரூபாயாக உயர்ந்தது… துயரத்தில் மூழ்கிய மக்கள்!!