பிராய்லர் கோழிக்கு ஹார்மோன் ஊசி போடுறாங்களா? இந்த இறைச்சியில் இத்தனை நன்மைகள் இருக்கா!!

Photo of author

By Divya

பிராய்லர் கோழிக்கு ஹார்மோன் ஊசி போடுறாங்களா? இந்த இறைச்சியில் இத்தனை நன்மைகள் இருக்கா!!

Divya

இன்றைய விலைவாசி உயர்வால் ஒவ்வொன்றிற்கும் பார்த்து பார்த்து செலவழிக்க வேண்டியுள்ளது.ஆட்டுக்கறி தங்கம் விலைக்கு விற்கப்படுவதால் ஏழை மக்கள் அசைவத்தை ருசிபார்க்க வேண்டுமென்றால் பிராய்லர் இறைச்சியை தான் வாங்க வேண்டும்.மற்ற இறைச்சிகளை விட பிராய்லர் கறி விலை குறைவானது மற்றும் ருசியானது.அனைவரது வீடுகளில் வாரம் ஒருமுறை இந்த பிராய்லர் கோழி இறைச்சியை வாங்கி ருசிபார்த்துவிடுகிறார்கள்.

சில அசைவப் பிரியர்கள் தினமும் பிராய்லர் இறைச்சியை சில்லி,வறுவல்,குழம்பு,பிரியாணி,கிரேவி என்று ஏதேனும் ஒரு விதத்தில் சாப்பிடுகிறார்கள்.என்னதான் ருசி அதிகமாக இருந்தாலும் பிராய்லர் என்றால் மக்கள் மனதில் அது ஊசி மூலம் வளர்க்கப்படும் கோழி என்ற எண்ணம் தான் ஓடுகிறது.

நாட்டு கோழி கிட்டத்தட்ட 6 முதல் 8 மாதங்கள் வளர்ந்த பின்னரே சமைக்க முடியும்.அதாவது கிட்டத்தட்ட 8 மாதங்களுக்கு பின்னர் தான் நாட்டுக்கோழியில் கறி இருக்கும்.ஆனால் பிராய்லர் கோழி 2 மாதங்களிலேயே கறிக்கு வந்துவிடும்.இதற்கு காரணம் ஹார்மோன் ஊசி தான் என்று இன்று வரை பலரும் நினைத்து கொண்டிருக்கின்றனர்.இதன் காரணமாகே சிலர் பிராய்லர் கோழி வாங்க தயக்கம் காட்டுகின்றனர்.பிராய்லர் கோழி மற்றும் முட்டையை சாப்பிட்டால் அது மலட்டு தன்மையை ஏற்படுத்திவிடும் என்று பலரும் தெரிவிக்கின்றனர்.

ஆனால் உண்மையில் இது நம் தவறான கண்ணோட்டம் ஆகும்.பிராய்லர் என்பது கறிக்காக வளர்க்கப்படும் ஒரு கோழி இனமாகும்.அதேபோல் லேயர் முட்டைக்காக வளர்க்கப்படுகிறது.பிராய்லர் கோழியின் எடை குறைந்த நாட்களிலேயே அதிகரிக்க காரணம் கொடுக்கப்படும் தீவனம் தான்.இந்த கோழி இனம் முழுக்க முழுக்க கறிக்காக உருவாக்கப்பட்டவை.இந்த கோழிகளில் ஹார்மோன் ஊசி செலுத்தப்படுவதில்லை.கோழிகளுக்கு நோய் தொற்று ஏற்படாமல் இருக்க தடுப்பு ஊசி மற்றும் தடுப்பு மருந்துகள் மட்டுமே கொடுக்கப்படுகிறது.இதை நாம் ஹார்மோன் ஊசி என்று தவறாக நினைத்துக் கொண்டிருக்கின்றோம்.பண்ணைகளில் கூண்டுக்குள் மற்றும் ஒரே இடத்தில் வளர்க்கப்படுவதால் தான் கோழிகளின் எடை விரைவாக அதிகரிக்கிறது.