குழந்தைகளுக்கு இரத்த சோகை வருமா? இதன் அறிகுறிகள் மற்றும் குணமாக்கும் மூலிகை பானம்!!

Photo of author

By Divya

குழந்தைகளுக்கு இரத்த சோகை வருமா? இதன் அறிகுறிகள் மற்றும் குணமாக்கும் மூலிகை பானம்!!

Divya

தற்பொழுது இருக்கின்ற காலகட்டத்தில் பலரும் நோய் பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர்.குறிப்பாக பெண்கள்,குழந்தைகள் இரத்த சோகை பாதிப்பால் பாதிக்கப்படுவது சமீப காலமாக அதிகரித்து வருகிறது.

இரத்த சோகை அறிகுறிகள்:-

1)உடலில் அதீத சோர்வு
2)மயக்க உணர்வு
3)தலைசுத்தல்
4)உடல் பலவீனம்
5)தொண்டைப்புண்
6)வாய்ப்புண்
7)நாக்கில் புண்
8)மார்பு வலி
9)சுவாசப் பிரச்சனை

இரத்த சோகை வர என்ன காரணம்?

உடலில் இரும்புச்சத்து குறைபாடு ஏற்பட்டால் இரத்த சோகை பாதிப்பு உண்டாகும்.வைட்டமின் பி 12 குறைபாடு இருப்பவர்களுக்கு இரத்த சோகை பாதிப்பு ஏற்படும்.இரத்த இழப்பு,இரத்தத்தில் போலேட் குறைபாடு போன்றவை இருந்தால் இரத்த சோகை ஏற்படும்.

இரத்த சோகை பாதிப்பில் இருந்து மீள மற்றும் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

உங்களுக்கு இரத்த சோகை பிரச்சனை இருந்தால் இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும்.இரத்தத்தில் ஹீமோ குளோபின் அளவை அதிகரிக்கும் உணவுகளை சாப்பிட வேண்டும்.இரத்த சோகை பிரச்சனை உள்ள குழந்தைகளுக்கு இரும்புச்சத்து மாத்திரையை கொடுக்க வேண்டும்.

இரத்த சோகையை குணமாக்கும் முருங்கை கீரை பானம்:

ஒரு கைப்பிடி முருங்கை கீரையை பாத்திரத்தில் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும்.அதன் பின்னர் சிறிது சீரகம்,மிளகு,பூண்டு ஆகியவற்றை போட்டு குறைவான தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.

முருங்கை கீரை பானம் நன்றாக கொதித்து வந்ததும் இதை ஒரு கிண்ணத்தில் வடிகட்டி குடிக்க வேண்டும்.முருங்கை கீரையில் இருக்கின்ற இரும்புச்சத்து இரத்த சோகையை குணமாக்க உதவுகிறது.