என்ன சாப்பிட்டாலும் குழந்தைகள் ஒல்லியாகவே இருக்காங்களா? இந்த பொடியை பாலில் கலந்து குடுத்து பாருங்கள்.. நீங்களே ஆச்சரியப்படுவீங்க!
குழந்தைகள் சரியாக உணவு சாப்பிட தவறினால் உடல் எடை குறைந்துவிடும்.சில குழந்தைகளுக்கு அடிக்கடி உடல்நலக் கோளாறு ஏற்படும்.இதனால் அவர்கள் உடல் எடை தொடர்ந்து குறைந்து பலவீனமாக காணப்படுவார்கள்.
இவ்வாறு உடல் எடை குறைந்து காணப்படும் குழந்தைகளுக்கு சத்தான கஞ்சி குடுத்தால் எதிர்பார்த்த பலன் கிடைக்கும்.
தேவையான பொருட்கள்:-
1)பொட்டுக்கடலை – 4 ஸ்பூன்
2)வேர்க்கடலை – 4 ஸ்பூன்
3)முந்திரி – 4
4)பாதாம் பருப்பு – 4
5)உலர் திராட்சை – 4
6)அரிசி – 2 ஸ்பூன்
செய்முறை:-
மேலே குறிப்பிட்டுள்ள பொருட்களை சொல்லிய அளவுபடி எடுத்துக் கொள்ளவும்.பிறகு அடுப்பில் ஒரு வாணலி வைத்து ஒவ்வொரு பொருளாக வறுத்துக் கொள்ளவும்.
முதலில் பொட்டுக்கடலை போட்டு மிதமான தீயில் வறுக்கவும்.அதேபோல் வேர்க்கடலை,முந்திரி,பாதாம் பருப்பு,அரிசி,உலர் திராட்சை ஆகிய பொருட்களை கருகிடாமல் வறுத்து ஆற விடவும்.
பிறகு ஒரு மிக்ஸி ஜார் எடுத்து அதனுள் வறுத்து வைத்திருக்கும் பொருட்களை சேர்த்து பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.
பின்னர் ஒரு பாத்திரம் எடுத்து அதில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி அரைத்த சத்து பவுடர் இரண்டு தேக்கரண்டி அளவு சேர்த்து கரைக்கவும்.பிறகு அடுப்பில் வைத்து மிதமான தீயில் பச்சை வாடை நீங்கும் வரை வேகவிடவும்.
இந்த சத்து கஞ்சியை நன்கு ஆறவிட்டு குழந்தைகளுக்கு சாப்பிட கொடுக்கவும்.இவ்வாறு செய்தால் குழந்தைகள் எடை கூடும்.
மற்றொரு தீர்வு:-
1)கருப்பு உளுந்து – 4 ஸ்பூன்
2)மக்காச்சோளம் – 4 ஸ்பூன்
3)ஜவ்வரிசி – 2 ஸ்பூன்
4)பாதாம் பருப்பு – 10
5)சுக்கு – ஒரு துண்டு
6)ஏலக்காய் – 2
செய்முறை:-
இந்த பொருட்களை ஒவ்வொன்றாக வறுத்து ஆறவிட்டு அரைத்து பவுடராக்கி கொள்ளவும்.பின்னர் ஒரு பாத்திரத்தில் ஒரு கப் பால் ஊற்றி அரைத்த பவுடர் ஒரு தேக்கரண்டி சேர்த்து நன்கு கலந்து விடவும்.
பிறகு அடுப்பில் வைத்து குறைந்த தீயில் கொதிக்க விடவும்.இந்த தருணத்தில் சிறிது நாட்டு சர்க்கரை சேர்த்து கலந்து விடவும்.அதன் பின்னர் இந்த கஞ்சியை ஆறவிட்டு குழந்தைகளுக்கு குடிக்க கொடுக்கவும்.இதை தொடர்ந்து 3 மாதங்கள் குழந்தைகளுக்கு கொடுத்தால் அவர்களின் உடல் எடை இயற்கையான முறையில் அதிகரிக்கும்.