சளி இருமலால் குழந்தைகள் ரொம்ப அவஸ்தை படுறாங்களா? இருக்கவே இருக்கு பாட்டி வைத்தியம்!!

Photo of author

By Rupa

பருவ காலங்களில் சளி இருமல் பாதிப்பு வந்துவிட்டால் அதில் இருந்து மீள்வதற்குள் படாதா பாடு பட்டுவிடுவோம்.பெரியவர்களுக்கே இந்த நிலமை என்றால் குழந்தைகளை நிலைமயை பற்றி நினைக்க அச்சமாக இருக்கிறது.

குழந்தைகளுக்கு சளி இருமல் பாதிப்பு இருந்தால் கீழே கொடுக்கப்பட்டுள்ள பாட்டி வைத்தியத்தை செய்து குணப்படுத்தவும்.

தேவையான பொருட்கள்:

1)குப்பைமேனி – 10
2)வேப்பிலை – 4
3)வெற்றிலை – 1
4)ஓமவல்லி – 2
5)துளசி – 5
6)தேன் – 1/2 ஸ்பூன்

செய்முறை விளக்கம்:

மேலே குறிப்பிட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் சொல்லிய அளவுபடி எடுத்துக் கொள்ளவும்.பிறகு தேனை தவிர மற்ற பொருட்களை நீரில் அலசி சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும்.

பிறகு உரல் அல்லது மிக்ஸி ஜாரை நன்கு சுத்தம் செய்து குப்பைமேனி,வேப்பிலை,வெற்றிலை,ஓமவல்லி இலை மற்றும் துளசி இலை சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு பேஸ்ட் பதத்திற்கு அரைக்கவும்.

அதன் பின்னர் ஒரு காட்டன் துணி அல்லது வடிகட்டியில் இந்த பேஸ்டை போட்டு பிழிந்து சாறு எடுத்துக் கொள்ளவும்.

பிறகு அதில் 1/2 ஸ்பூன் அளவு தேன் கலந்து குடித்தால் சளி,இருமல் பிரச்சனை ஓரிரு தினங்களில் குணமாகிவிடும்.

தேவையான பொருட்கள்:

1)முருங்கை கீரை – 1/4 கப்
2)மிளகு – இரண்டு
3)பூண்டு பற்கள் – நான்கு
4)மஞ்சள் தூள் – சிறிதளவு

செய்முறை விளக்கம்:

அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்து 1/4 கப் முருங்கை கீரை மற்றும் 1/2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும்.பிறகு இரண்டு கருப்பு மிளகு மற்றும் நான்கு பல் பூண்டை உரலில் போட்டு தட்டி கொதிக்கும் முருங்கை தண்ணீரில் சேர்க்கவும்.

பிறகு அதில் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க வைத்து ஆறவிட்டு வடிகட்டி ஒரு நாளைக்கு மூன்று வேளை குழந்தைகளுக்கு கொடுக்கவும்.இந்த பானத்தை மூன்று தினங்களுக்கு கொடுத்தால் சளி,இருமல் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்.