இன்றைய காலத்தில் குழந்தைகள் ஆரோக்கியமற்ற உணவுகளையே விரும்பி உண்கின்றனர்.இதனால் குலில் புழுக்கள் அதிகளவு உருவாகி வயிற்று வலியை ஏற்படுகிறது.கொக்கி புழு,சாட்டை புழு,நாடாப்புழு என்று பல்வேறு வகையான புழுக்கள் குடலில் உருவாக நாம் செய்யும் சில தவறுகளே காரணம்.
கசப்பு நிறைந்து பாகற்காய்,வேப்பிலை,மணத்தக்காளி கீரையை வாரத்தில் ஒருமுறை ஜூஸாக செய்து கொடுத்தால் குடலில் உள்ள புழுக்கள் அனைத்தும் வெளியேறிவிடும்.ஆனால் இன்றுள்ள குழந்தைகள் இனிப்பு உணவுகளுக்கு அடிமையாக உள்ளனர்.இனிப்பு உணவுகளை அதிகளவு உட்கொண்டால் குடலில் புழுக்கள் உற்பத்தியாகி வயிற்றுப்போக்கு,கழிச்சல்,ஆசனவாயில் அரிப்பு போன்றவை ஏற்படும்.
எடுத்துக் கொள்ள கூடிய உணவு மட்டுமின்றி பருகும் நீரும் தரமற்றதாக இருப்பதால் குடற்புழு உருவாகிறது.குடலில் அதிகளவு புழுக்கள் இருந்தால் அவை நாம் உண்ணும் உணவில் கிடைக்கக் கூடிய ஊட்டச்சத்துக்களை உறிஞ்சிவிடும்.இதனால் உடல் சோர்வு,நமைச்சல்,பசியின்மை போன்ற பாதிப்புகள் ஏற்படும்
குடற்புழுக்களை வெளியேற்றும் ஹோம் ரெமிடி இதோ:
1.இரண்டு தேக்கரண்டி வேப்பங் கொழுந்தை அரைத்து சாறு எடுத்து குழந்தைகளுக்கு கொடுத்தால் குடலில் உள்ள புழுக்கள் இறந்து மலம் வழியாக வெளியேறிவிடும்.
2.பிஞ்சு பாகற்காயை அரைத்து சாறு எடுத்து பருகினால் குடற்புழுக்கள் அழிந்துவிடும்.
3.கசப்பு தன்மை கொண்ட பப்பாளி இலையை ஜூஸாக செய்து பருகி வந்தால் குடற்புழுக்கள் அழிந்துவிடும்.
4.மணத்தக்காளி கீரை மற்றும் காயை தண்ணீர் விட்டு அரைத்து சாறு எடுத்து பருகி வந்தால் குடற்புழுக்கள் அழிந்துவிடும்.
5.நொச்சி இலையை அரைத்து 10 மில்லி அளவு பருகி வந்தால் குடற்புழுக்கள் அழிந்துவிடும்.