குழந்தைகளின் எடை மற்றும் உயரம் வயதிற்கேற்றபடி இருக்க வேண்டும்.சிலர் உயரமாக வளர்வார்கள்.சிலர் உயரம் குறைவாக இருப்பவர்கள்.குழந்தைகளின் உயரம் என்பது அவர்களின் மரபணு சார்ந்த ஒன்றாக இருக்கிறது.
குழந்தைகளின் முன்னோர்கள் உயரமாக இருந்தால் அவர்களும் உயரமாக வளர்வார்கள்.ஒருவேளை குழந்தையின் முன்னோர் உயரம் குறைவாக இருந்திருந்தால் குழந்தையும் உயரம் குறைவாக வளரத் தொடங்குவார்கள்.
குழந்தைகள் உடலில் இருக்கின்ற ஹார்மோன்களில் பிரச்சனை இருந்தால் அவர்களின் உயரத்தில் பாதிப்பு ஏற்படும்.குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட்டால் அவர்களின் வளர்ச்சி தடைபடும்.
குழந்தைகள் உடலில் சுரக்கும் பிட்யூட்டரியின் செயல்பாட்டில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் அது அவர்களின் வளர்ச்சியை பாதிக்கச் செய்துவிடும்.இதனால் குழந்தைகள் கால்சியம் சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டியது முக்கியம்.
பால் மற்றும் பால் பொருட்களில் கால்சியம் சத்து அதிகளவு நிறைந்து காணப்படுகிறது.வளரும் பிள்ளைகள் தினமும் ஒரு கிளாஸ் பால் அவசியம் பருக வேண்டும்.குழந்தைகளின் எலும்பு ஆரோக்கியம் மேம்பட,எலும்புகள் வளர்ச்சி அடைய கால்சியம் நிறைந்த பால் பருகுவது அவசியமாகிறது.
குழந்தைகளின் எலும்புகள் வளர்ச்சி அடைந்தால் அவர்களின் உயரம் அதிகரிக்கும்.பால் குழந்தைகளின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.எனவே குழந்தைகளுக்கு தினமும் காலை மற்றும் மாலை நேரத்தில் ஒரு கிளாஸ் பால் கொடுப்பதை பெற்றோர் வழக்கமாக்கி கொள்ளுங்கள்.
குழந்தைகளின் உயரத்தை ஊக்குவிக்கும் பால் குடிக்க கொடுக்கலாம்.இது தவிர புரதம் நிறைந்த முட்டை,சோயா பால்,மீன்,இறைச்சி போன்ற உணவுகளை சாப்பிடக் கொடுக்கலாம்.ஊற்றவைத்த சுண்டல்,வேர்க்கடலை,உளுந்து பருப்பு போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொண்டால் உடல் உயரம் அதிகரிக்கும்.