நான் விஜய்யை காப்பி அடிக்கிறேனா..?? சைக்கிளில் சென்றது குறித்து விளக்கம் அளித்த விஷால்..!!

0
204
Do I make Vijay coffee..?? Vishal gave an explanation about going on a bicycle..!!
Do I make Vijay coffee..?? Vishal gave an explanation about going on a bicycle..!!

நான் விஜய்யை காப்பி அடிக்கிறேனா..?? சைக்கிளில் சென்றது குறித்து விளக்கம் அளித்த விஷால்..!!

நடிகர் விஷால் நடந்து முடிந்த தேர்தலில் சைக்கிளில் சென்று வாக்களித்திருந்தார். முன்னதாக நடிகர் விஜய் தான் கடந்த தேர்தலில் சைக்கிளில் வாக்களித்து இருந்தார். எனவே விஷால் விஜய்யை காப்பி அடிப்பதாக விமர்சனங்கள் எழுந்தது. இந்நிலையில் இதுகுறித்து விஷால் விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.

அதன்படி அவர் கூறியிருப்பதாவது, “எனக்கு விஜய்யை ரொம்ப பிடிக்கும். ஆனால் அவர் செய்த காரணத்திற்காக நான் சைக்கிளில் வாக்களிக்க செல்லவில்லை. என் பெற்றோரின் தேவைக்காக ஒரு வாகனம் உள்ளது. அதை தாண்டி என்னிடம் இருந்த எல்லா வாகனங்களையும் விற்று விட்டேன். வேறு வாகனங்கள் இல்லை என்பதால் தான் சைக்கிளில் வந்தேன்.

அதுமட்டுமல்ல இங்குள்ள சாலைகளின் கண்டிஷன் குறித்து உங்களுக்கே நன்றாக தெரியும். இதில் நான் புதிய காரை வாங்கி ஓட்டினால், அதற்காக மட்டுமே மாதம் ஒரு தனி தொகையை நான் செலவழிக்க வேண்டியுள்ளது. எனவே நான் சமீபகாலமாகவே சைக்கிளை தான் பயன்படுத்தி வருகிறேன். சமீபத்தில் கூட காரைக்குடியில் இருந்து திருச்சிக்கு இடம்பெயர்ந்த போது பொருட்களை வண்டியில் ஏற்றிவிட்டு 83 கிலோ மீட்டர் சைக்கிளில் தான் பயணம் செய்தேன்.

எனவே நான் விஜய்யை எல்லாம் காப்பி அடிக்கவில்லை. என்னிடம் வேறு வாகனம் எதுவும் இல்லை. அதனால் தான் நான் சைக்கிளில் சென்றேன். அவ்வளவு ஏன் சில சமயங்களில் படப்பிடிப்பிற்கு கூட நான் சைக்கிளில் தான் செல்கிறேன்” என கூறி விளக்கம் அளித்துள்ளார்.

Previous articleசெல்போன் கடையில் வேலை பார்க்கும் சன் டிவி சீரியல் நடிகர்.. இவருக்கு இப்படி ஒரு நிலைமையா..??
Next articleமக்களே எச்சரிக்கை: மாட்டு பாலில் பறவை காய்ச்சல் அறிகுறி!! தமிழகத்திற்கு தான் அடுத்த பாதிப்பு!!