”மறுபடியுமா…!” ”செந்தில் பாலாஜியின் மைண்டு வாய்ஸ்” நீதிபதியின் உத்தரவு!
சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜிக்கு அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.
இந்த வழக்கில் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி அளித்த மனுவானது சென்னை உயர் நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வருகிறது.
இந்த நிலையில் செந்தில் பாலாஜியின் காவல் இன்றுடன் முடிவடைந்த நிலையில் இன்று அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும். ஆனால் இந்த வழக்கை விசாரிக்க கூடிய சிறப்பு நீதிமன்றமான சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி இன்று விடுமுறை என்பதால் மூன்றாவது அமர்வு நீதிபதியான ஆனந்த் முன்பு குழல் சிறையில் இருந்து காணொளி காட்சி மூலமாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆஜர் படுத்தப்பட்டார்.
தற்போது அவரது நீதிமன்ற காவலை மார்ச் 4ஆம் தேதி வரை நீட்டித்து நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இதன் மூலம் 22 ஆவது முறையாக செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலானது நீட்டிக்கப்பட்டுள்ளது.