தமிழக பட்ஜெட்டா? மத்திய அரசின் பட்ஜெட்டா? வானதி சீனிவாசன் !

0
249
#image_title

தமிழக பட்ஜெட்டா? மத்திய அரசின் பட்ஜெட்டா? வானதி சீனிவாசன் !

தமிழக சட்ட சபையில் இன்று வேளாண் பட்ஜெட்டிற்கான அறிக்கையை நிதியமைச்சர் எம். ஆர். கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.

இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் பேசிய போது, ”தனியாக விவசாயிகளுக்கென்று விவசாயத்திற்கென்று எந்த ஒரு முக்கியமான அல்லது தொலைநோக்கு பார்வையுடனான திட்டங்கள் ஏதுமில்லை.

எவையெல்லாம் மத்திய அரசின் முக்கியமான திட்டங்களோ, மத்திய அரசின் நிதி அதிகமாக பெறக்கூடிய திட்டங்களோ, அவற்றையெல்லாம் ஒருங்கிணைத்து ஒரு பட்ஜெட்டை உருவாக்கியுள்ளனர்.
அதாவது சிறுதானிய இயக்கம், தேனி வளர்ப்புகென்று தனியான இயக்கம், சொட்டுநீர் பாசனம் உள்ளிட்ட 60% திட்டங்கள் மத்திய அரசின் பங்களிப்பு திட்டங்கள்.

வேளாண் பிரச்சனைகளுக்கு தீர்வு அளிக்கும் திட்டங்கள் எதுவும் பட்ஜெட்டில் இடம் பெறவில்லை. இந்த வேளாண் நிதிநிலை அறிக்கை என்பது ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது.

கரும்பு விவசாயிகளுக்கு டன்னுக்கு ரூ.215 உயர்த்தி கொடுத்தாலும், இன்னும் பல விவசாயிகள் கருமை அறுவடை செய்து கொடுத்துவிட்டு பணத்தை பெற முடியாமல் தவித்து வருகின்றனர்.

மேலும் விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்கும் கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்றாமல் உள்ளது.” எனக் குறிப்பிட்டார்.

author avatar
Preethi