உங்கள் வீட்டில் பண வரவு அதிகரிக்க இந்த ஒரு பரிகாரத்தை மட்டும் செய்யுங்கள்!!

Photo of author

By Divya

உங்கள் வீட்டில் பண வரவு அதிகரிக்க இந்த ஒரு பரிகாரத்தை மட்டும் செய்யுங்கள்!!

வீட்டில் நேர்மறை எண்ணங்கள், கடவுளின் அருள் இருந்தால் மட்டுமே பண வரவு அதிகரிக்கும். இல்லையென்றால் கோடி கோடியாய் சம்பாதித்தாலும் பணம் வந்த வழியே சென்று விடும்.

கடவுளின் அனுகிரகம் நம் வீட்டில் அதிகரிக்க செல்வத்திற்கு அதிபதியான மகா லட்சுமி வீட்டில் குடி புக நீங்கள் ஒரு பரிகாரம் செய்ய வேண்டும்.

பரிகாரம் செய்ய தேவைப்படும் பொருட்கள்:

*பச்சை கற்பூரம்
*ஏலக்காய்
*விரலி மஞ்சள்
*பன்னீர்
*சந்தனம்
*இலவங்கம்

ஒரு வெள்ளை காட்டன் துணியில் இந்த பொருட்கள் அனைத்தையும் சம அளவு போட்டு அதில் சிறிது பன்னீர் தெளித்து மூட்டையாக கட்டிக் கொள்ளவும். இந்த மூட்டையை வீட்டு பூஜை அறை, துளசி மாடம், வீட்டு நிலவாசல், பணம் வைத்துள்ள இடம்.இதில் எந்த இடத்தில் வேண்டுமானாலும் வைக்கலாம். மாதம் ஒருமுறை இந்த மூட்டையில் உள்ள பொருட்களை யார் காலும் படாத இடத்தில் போட்டு விடவும். பிறகு மீண்டும் இதேபோல் மூட்டை செய்து ஏற்கனவே மூட்டை தொங்க விட்ட இடத்தில் கட்டி தொங்க விடவும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் பண வரவு அதிகரிக்கும். செல்வந்தர்களாகும் யோகம் உண்டாகும்.