சுய இன்பம் செய்யும் ஆண்களின் விந்தணுக்கள் தீர்ந்து விடுமா? ஒரே நாளில் பலமுறை செய்தால் என்னாகும் தெரியுமா?

Photo of author

By Divya

இன்றைய நவீன உலகில் சுய இன்பம் பற்றி பேச மக்கள் கூச்சப்படுகின்றனர்.காமம் என்பது ஆண்,பெண் இருவருக்கும் தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கிறது.ஆண்களை காட்டிலும் பெண்கள் காமத்தில் அதிக நாட்டம் கொண்டிருக்கிறார்கள் என்ற கருத்து உள்ளது.ஆண்கள் ஒருமுறை உச்சக்கட்டம் அடைந்து விட்டால் உடல் சோர்ந்து விடுவார்கள்.ஆனால் பெண்கள் 3,4 முறை சலிக்காமல் உச்சம் அடைவார்கள்.

சொந்த பிறப்புறுப்புகளை தூண்டுவதன் மூலம் ஒருவர் சுய இன்பம் அடைகிறார்.இது காம உணர்வை வெளிப்படுத்த சாதாரண மற்றும் ஆரோக்கியமான வழியாக பார்க்கப்படுகிறது.சுய இன்பம் செய்வதால் மன அழுத்தம்,பதற்றம் குறையும்.நிம்மதியான தூக்கத்தை அனுபவிக்க சுய இன்பம் உதவுகிறது.

பெண்களுக்கு சுய இன்பம் செய்வதால் மாதவிடாய் வயிற்றுவலி குறைவதாக ஆய்வு தகவல்கள் தெரிவிக்கிறது.நீண்ட நேரம் உடலுறவில் ஈடுபட சுய இன்பம் உதவும்.

ஆனால் அடிக்கடி சுய இன்பம் செய்தால் உடலில் பக்கவிளைவுகள் ஏற்படத் தொடங்கிவிடும்.பலமுறை பிறப்புறுப்பை தூண்டி உச்சம் அடையும் ஆண்,பெண் அனைவரும் சில விஷயங்களை கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்.

சுய இன்பம் செய்யும் ஆண்களுக்கு விந்தணுக்கள் தீர்ந்துவிடும் என்ற கருத்துக்கள் பேசப்படுகிறது.ஆனால் விந்தணு என்பது நமது உமிழ்நீர் போன்று 24 மணி நேரமும் உற்பத்தியாகி கொண்டே இருக்கும்.சுய இன்பம் செய்வதால் விந்தணு குறைந்துவிடும் என்பது கட்டுக்கதை.ஆனால் அதற்காக அடிக்கடி சுய இன்பம் செய்தால் உடல் நலக் கோளாறு ஏற்பட்டுவிடும்.

சுய இன்பம் செய்வதால் உடல் எடை குறைந்து விடுமோ என்ற அச்சம் பலரிடம் உள்ளது.ஆனால் சுய இன்பம் செய்வதற்கும் உடல் எடை குறைவதற்கும் எவ்வித தொடர்பும் இல்லை.அதேபோல் சுய இன்பம் செய்பவருக்கு பிறப்புறுப்பு சுருங்கிவிடும் என்ற பயம் இருக்கிறது.

ஆனால் சுய இன்பம் செய்வதால் பிறப்புறுப்பு சுருங்காது.அதிகமாக சுய இன்பம் செய்தால் பிறப்புறுப்பில் வலி மற்றும் எரிச்சல் உண்டாகும்.சுய இன்பம் செய்வது தவறில்லை ஆனால் அடிக்கடி செய்தால் உடலுறவில் ஈர்ப்பு இல்லாமல் போய்விடும்.உங்களால் அடிக்கடி சுய இன்பம் செய்யும் பழக்கத்தை கட்டுப்படுத்த முடியவில்லை என்றால் மருத்துவரை அவசியம் அணுக வேண்டும்.