கொசுக்கள் கடிக்கிறதா?? மூட்டு வலி கழுத்துவலியா? இந்த ஒரு ஆயில் போதும்

Photo of author

By Amutha

கொசுக்கள் கடிக்கிறதா?? மூட்டு வலி கழுத்துவலியா? இந்த ஒரு ஆயில் போதும்!

இந்த பதிவில் கற்பூரவள்ளி எண்ணெய் தயார் செய்வது எப்படி என்று பார்ப்போம்.உங்களுக்கு மூட்டு வலி, கை கால் வலி, கழுத்து வலி என அனைத்து வலிகளுக்கும் இந்த ஆயிலை தடவினால் போதும். இன்று நிறைய பேர் வீடுகளில் இருக்கும் ஒரு பிரச்சனை கொசுக்கள். இந்த ஆயிலை நீங்கள் தடவி வந்தால் ஒரு கொசு கூட உங்களை கடிக்காது. சில பேருக்கு வண்டு கடித்து வீக்கம் இருக்கும். இந்த ஆயிலை தடவினால் அந்த வீக்கம் காணாமல் போகும். இந்த ஆயிலை தயார் செய்வது எப்படி என பார்ப்போம்.

கற்பூரவள்ளி இலையை வீட்டில் மிகவும் எளிதாக வளர்க்கலாம். ஒரு சிறிய தண்டுடன் கிள்ளி வைத்தால் போதும் நன்றாக அழகாக வளரும். மேலும் மருத்துவ குணங்களை நமக்கு அள்ளித்தரும். பொதுவாக கற்பூரவள்ளி இலைகள் சளி இருமல் ஜலதோஷம் ஆகிய அனைத்திற்கும் அருமருந்து.

நல்ல பிரஷ்ஷான கற்பூரவள்ளி இலைகள் ஒரு 20 எடுத்துக் கொண்டு நன்றாக அலசிக் கொள்ளவும். இதை ஒரு மிக்ஸி ஜாரில் நன்றாக நைசாக அரைத்துக் கொள்ளவும். தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம்.

அரைத்த விழுதை ஒரு கப்பில் சேர்த்துக் கொள்ளவும். அடுத்து எந்த கப்பில் விழுது உள்ளதோ அதே கப் அளவு நல்ல சுத்தமான செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெய் ஒரு கப் எடுத்துக் கொள்ளவும்.

அடுத்து ஒரு இரும்பு வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் தேங்காய் எண்ணெய் சேர்த்து லேசாக சூடானதும் அதில் கற்பூரவள்ளி அரைத்த விழுதை சேர்க்கவும். என்னை அதிக சூடாக ஆக கூடாது. மிதமான தீயில் வைத்து ஒரு கரண்டியை கொண்டு நன்றாக கலந்து விடவும்.

விழுதிலுள்ள ஈரம் முழுவதும் வற்றும் வரை நன்றாக கலக்கவும். ஈர சலசலப்பு அடங்கியதும் எண்ணெய் நல்ல பச்சை நிறத்தில் மாறும். நன்றாக வாசனை வீசும். இந்த வாசத்திற்கு கொசுக்கள் வராது. மேலும் நாமும் நுகரும்போது நமக்கு சளி தொல்லை இருந்தால் கூட சரியாகும்.நன்றாக எண்ணெய் காய்ந்ததும் அதை இறக்கி ஆறவிட்டு ஒரு காற்று புகாத பாட்டிலில் வடிகட்டி வைத்துக் கொள்ளவும். சாதாரண அறை வெப்ப நிலையில் வைத்துக் கொள்ளலாம்.

இதை பயன்படுத்தும் முறைகளை பார்ப்போம். உங்கள் வீட்டில் அதிக கொசுக்கள் இருந்தால் சிறிது எண்ணெயை எடுத்து உடம்பில் தடவிக் கொள்ளலாம். ஒரு கொசு கூட நம்மை கடிக்காது.
அடுத்து உங்களுக்கு சளி தொந்தரவு,தும்மல், இருமல், நெஞ்சு சளி, சைனஸ் பிராப்ளம் தலைவலி, தலையில் நீர் கோர்த்தல்,போன்ற பிரச்சனைகளுக்கு இந்த ஆயில் சிறிது எடுத்து தலையில் தடவவும்.

இதனால் மேற்கூறிய பிரச்சினைகள் அனைத்தும் காணாமல் போகும். மேலும் மூட்டு வலி,கை, கால் வலி போன்றவை வலிக்கும் போது அந்த இடத்தில் இந்த எண்ணெயை தடவினால் வலி காணாமல் போகும். வாயு தொந்தரவினால் கை கால்கள் வீங்கியது போன்ற உணர்வு ஏற்படும். அந்த இடங்களில் இந்த ஆயிலை தடவினால் நிவாரணம் கிடைக்கும்.