கந்துவட்டி கடன் தொல்லையில் இருந்து விடுபட நவதானிய பரிகாரம் செய்யுங்கள்..!

0
325
#image_title

கந்துவட்டி கடன் தொல்லையில் இருந்து விடுபட நவதானிய பரிகாரம் செய்யுங்கள்..!

கடன் இல்லாத வாழ்க்கையை வாழும் நபர்கள் மிக மிகக் குறைவு. கல்யாணம், காது குத்து, நல்லது கெட்டது என்று எதற்கும் கடன் வாங்கி செய்யும் நிலை தான் எங்கு பார்த்தாலும்… அதிலும் பேங்க்கில் கடன் வாங்குவது எளிதற்ற காரியம் என்பதினால்… சுலபமாக கிடைக்க கூடிய கந்துவட்டி கடனை வாங்கி விடும் மக்கள் அதை கட்ட முடியாமல் திணறி வருகின்றனர்.

கந்து வட்டி, நாள் வட்டி, வார வட்டி, ஸ்பீடு வட்டி, ராக்கெட் வட்டி என்று வட்டி கடன் வகை ஏராளம். இதில் எந்த வட்டி கடனை வாங்கினாலும் ஆபத்து என்னவோ கடன் வாங்குபவருக்கு மட்டுமே…

இப்படி கடன் வாங்க வேண்டும் என்ற ஆசை யாருக்கும் இல்லை.. சூழல் அப்படி ஒரு நிலைக்கு தள்ளி விடுகிறது.

இந்த கடன் பிரச்னையில் இருந்து வெளியில் வர நவதானிய பரிகாரம் செய்வது நல்லது. இந்த பரிகாரம் செய்யத் தேவைப்படும் பொருட்கள் இரண்டு தான்.

*மண் செம்பு
*நவ தானியம்

வெள்ளிக் கிழமை காலை 6 மணி முதல் 7 மணிக்குள் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும்.

ஒரு மண் செம்பை தண்ணீரில் சுத்தம் செய்து மஞ்சள், குங்குமம் இட்டு நவதானியத்தை நிரபிக் கொள்ளவும்.

இந்த மண் செம்பை யார் கையும் எட்டாத இடத்தில் வைக்கவும். அடுத்த வெள்ளி வந்த உடன் இந்த நவதானியத்தை பறவைகளுக்கு உணவாக கொடுத்து விட்டு பிறகு மீண்டும் அந்த செம்பில் நவதானியத்தை நிரப்பி வைக்கவும்.

இவ்வாறு தொடர்ந்து ஒவ்வொரு வெள்ளிக் கிழமை அன்று செய்து வர விரைவில் கடன் தொல்லை அனைத்தும் நீங்கும்.

Previous articleஒரு கேஸ் சிலிண்டர் 60 நாட்கள் வரை வைத்து பயன்படுத்துவதும் டெக்னீக்!
Next articleசென்னையில் அரசு வேலை..! மாதம் ரூ.6,400/- ஊதியம்! வாங்க விண்ணப்பம் செய்யலாம்!