இந்த தேர்வு வேண்டாம்! மறு தேர்வு வேண்டும் வலியுறுத்திய ஈபிஎஸ்! 

0
258
#image_title

இந்த தேர்வு வேண்டாம்! மறு தேர்வு வேண்டும் வலியுறுத்திய இபிஎஸ்! 

தமிழக அரசு குரூப் 2 மெயின் தேர்வை ரத்து செய்யுமாறு எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார்.

2022 மே 21ல் முதல் நிலை தேர்வு நடந்தது. நவம்பர் 8ம் தேதி முடிவுகள் வெளியான நிலையில்  55,071 பட்டதாரிகள் பாஸ் செய்ததாக அறிவிக்கப்பட்டது. இவர்களுக்கான மெயின்ஸ் தேர்வு (முதன்மை தேர்வு) பிப்ரவரி 25 நேற்று முன்தினம் நடந்தது.

இதையடுத்து பல மையங்களில் வினாத்தாள்களின் பதிவெண் மாறி இருந்ததால் குழப்பம் ஏற்பட்டது. வினாத்தாள்கள் திரும்ப பெறப்பட்டு தேர்வர்கள் அதற்கான விடைகளை செல்போன், புத்தகம் மூலம் பார்த்து சில மையங்களில் விடைகளை எழுதியதாக தெரியவந்துள்ளது. காலதாமதத்துக்கு ஏற்பட்ட நேரம் நீட்டிப்புடன் தேர்வர்கள் தேர்வு எழுத அனுமதி வழங்கப்பட்டது.

இதனால் குரூப் 2 தேர்வு கால தாமதம் காரணமாக பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதால் தகுதி வாய்ந்த தேர்வர்கள் வாய்ப்பை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

வினாத்தாள்களின் பதிவெண்கள் மாறியதால் ஏற்பட்ட குளறுபடிகளால் தாமதமாக தேர்வு நடைபெற்றது. அரசு அதிகாரிகளை நியமிக்கும் டி என் பி சி டிஎன்பிஎஸ்சி  போன்ற முக்கிய தேர்வுகளை  சரிவர முறையாக கையாள தெரியாத திமுக அரசை வன்மையாக கண்டிக்கிறேன். எனவே குரூப்-2  மெயின் தேர்வை தமிழக அரசு ரத்து செய்து மீண்டும் உரிய முறையில் மறுதேர்வு நடத்த வேண்டும் என எதிர்க்கட்சி தலைவரான எடப்பாடி பழனிசாமி தமிழக அரசை  வலியுறுத்தி உள்ளார்.

Previous articleசற்றுமுன்: 3 5 8 வகுப்புக்களுக்கு பொதுத்தேர்வு.. பொன்முடியின் அடுத்த அதிரடி!! தயாராகும் மாநில கல்வி கொள்கை!!
Next articleபொன்னியின் செல்வன் பாகம் 2! படக்குழு வெளியிட்ட நியூ அப்டேட்!