உணவு சாப்பிட்ட பிறகு தப்பி தவறியும் இதை செய்து விடாதீர்கள்! உயிருக்கே ஆபத்தாக மாறிவிடும்!

Photo of author

By Rupa

உணவு சாப்பிட்ட பிறகு தப்பி தவறியும் இதை செய்து விடாதீர்கள்! உயிருக்கே ஆபத்தாக மாறிவிடும்!

வரும் கால கட்டங்களில் சுற்றுச்சூழல் அதிக அளவு மாசுபட்டு வருகிறது.சுவாசிக்கும் காற்று தற்பொழுது மாசு அடைந்ததாக தான் உள்ளது. அந்த வகையில் நமது உடலுக்கு தேவையற்ற நோய்களை அதுவே கொண்டு சேர்த்து விடுகிறது. மறுபுறம் நம் தெரிந்தும் தெரியாமலும் சில தவறுகளை செய்து விடுகிறோம். அதனாலும் பல நோய்கள் வருவதற்கு நாமே காரணமாகி விடுகின்றோம். அந்த வகையில் நாம் உணவு உண்ட பிறகு சில உணவுகளை சாப்பிடுவதை வழக்கமாக வைத்துள்ளோம். அந்த உணவுகள் நாளடைவில் பெரிய நோய்களாக வந்து நிற்கும். முதலில் உணவு சாப்பிட்ட பிறகு பழங்கள் சாப்பிடக்கூடாது.

ஏனென்றால் பழத்தில் அதிக அளவு சர்க்கரை உள்ளது. நம் தினந்தோறும் உணவு சாப்பிட்ட பிறகு பழத்தை சாப்பிடுவதால் நமது சர்க்கரையின் அளவு அதிகரித்து சர்க்கரை நோய் வருவதற்கு அதுவே காரணமாகிவிடும். அதனால் உணவு சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு பழத்தை சாப்பிட வேண்டும். அதுமட்டுமின்றி பலமானது விரைவில் ஜீரணிக்கக் கூடிய ஒரு பொருள். நாம் உணவு உண்ட பிறகு பழத்தை சாப்பிடுவதால் முதலில் பழம்தான் ஜீரணமாகும்.பிறகு நாம் சாப்பிட்ட உணவு செரிமானம் ஆவதில் தாமதம் ஏற்படும்.

அதனால் செரிமான கோளாறு வயிறு உப்பசம் போன்றவையும் உண்டாக்குவதற்கு நாமே காரணம் ஆகிவிடுவோம்.அதேபோல சாப்பிட்டவுடன் தண்ணீர் கொடுக்கக்கூடாது. நம்மில் பலபேருக்கு அஜீரண கோளாறுகள் இருக்கும். அதற்கு காரணம் சாப்பிட்ட உடன் தண்ணீர் குடிப்பது தான்.பொதுவாகவே நம் சாப்பிட்டவுடன் உணவு ஜீரணம் ஆவதற்கு சில அமிலங்கள் சுரக்கும்.அச்சமயத்தில் நாம் தண்ணீர் குடிப்பதால் அமிலத் தன்மை மாறிவிடும். அதனால் அசிடிட்டி போன்ற பிரச்சனைகள் ஏற்படும். சாப்பிட்டவுடன் குளிப்பதை தவிர்க்க வேண்டும்.

செரிமானம் செரிமான பணி தொடங்கிய உடனே இரப்பை ஆகியவற்றில் ரத்த ஓட்டம் அதிகமாக காணப்படும். அச்சமயத்தில் நாம் குளிப்பதால் உடல் குளிர்ச்சி அடையும். கை கால்கள் ரத்த ஓட்டம் அதிகரித்து வயிற்றுப் பகுதியில் ரத்த ஓட்டம் குறைய நேரிடும். காரணத்தினால் உணவு செரிமானம் ஆவதற்கு தாமதமாகும். உணவு அருந்திய பிறகு டீ காபி குடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.ஏனென்றால் டீ மற்றும் காபி ஆனது அதிக அமிலத்தன்மை கொண்டது. குறிப்பாக டீ யில் டானிக் ஆசிட் என்ற அமிலம் உள்ளது. இந்த அமிலமானது நாம் சாப்பிட்ட உணவில் உள்ள இரும்புச்சத்தை குடல் உறிஞ்சுவதை தடுக்கும்.

அதனால் நமது உடலுக்கு தேவையான இரும்புச்சத்து கிடைக்காது. இக்காரணத்தினால் உணவு உண்ட பிறகு தேனீர் அருந்துவதை தவிர்க்க வேண்டும். உணவு சாப்பிட்ட உடன் புகை அருந்துவதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் நாம் சாதாரணமாக புகை அருந்துவதைவிட சாப்பிட்ட உடன் புகை அருந்துவது 10 மடங்கு அதிக கெடுதலை தரும்.உணவுக்குழாய் புற்றுநோய் ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக இது அமையும்.அதேபோல் சாப்பிட்டவுடன் உடனடியாக தூங்கக் கூடாது. ஒன்று அல்லது இரண்டு மணிநேரம் கழித்தே உறங்க செல்லவேண்டும். அதேபோல சாப்பிட்டவுடன் உடற்பயிற்சி செய்வதையும் தவிர்க்க வேண்டும்.