வீட்டுக்கு முன்னால் இந்தச் செடியை வைத்து விடாதீர்கள்! வீட்டில் சண்டை வரும்!

Photo of author

By Kowsalya

வீட்டுக்கு முன்னால் இந்தச் செடியை வைத்து விடாதீர்கள்! வீட்டில் சண்டை வரும்!

வீட்டிற்கு முன் அனைவரும் ஒருசில செடிகளை வைத்திருப்பார்கள். வீட்டிற்கு முன்னால் எந்த செடிகளை வைக்கலாம் வைக்கக்கூடாது என்பது பற்றி ஒரு நியதி உள்ளது.
வீட்டு முன் துளசி செடிகளை மற்றும் மருதாணி செடிகளை வைத்தால் நல்ல பண வரவு கிடைக்கும். வீட்டின் இரு புறங்களிலும் மருதாணி மற்றும் துளசிச் செடிகளை வைக்கலாம்.
1. ஒரு சிலர் வீட்டின் முன்பு அரளிச் செடிகளை வைப்பார்கள்.அது வண்ணமயமாக இருக்கிறது என்பதால் அந்தச் செடிகளை வைப்பார்கள். ஆனால் அரளி செடிகளை வைக்க கூடாது.
2.என்னதான் நாம் அதை பூஜைக்கு பயன்படுத்தி வந்தாலும் அதை வைக்கவே கூடாது.
3. நீங்கள் வீட்டில் ஒரு ஓரமாக வைக்கலாம். ஆனால் வீட்டிற்கு முன் காலையில் எழுந்தவுடன் அதை காணும் போது கெட்ட பலன்களை தரும்.
4. அப்படி வைப்பதனால் கணவன்-மனைவிக்கிடையே அன்னோன்யம் இருக்காது. கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு தொடர்ந்து சண்டைகள் வரும். மேலும் கணவன் வீட்டில் ஒற்றுமையாகவே செயல்படமாட்டார்.
5. வீட்டில் உள்ள குழந்தைகளும் பெரியவர்களை மதிக்காமல் செயல்படுவர். சொல் பேச்சு கேட்க மாட்டார்கள்.

எனவே ஒரு வீட்டின் முன் நீங்கள் அதைக் கடந்துதான் போக வேண்டும் என்றாலோ அல்லது காலையில் அதனில் முழிக்கும் போது இது மாதிரியான கெட்ட நிகழ்வுகள் ஏற்படும். எனவே இதனை உடனடியாக நீக்கிவிடுவது நல்லது.

அதிலிருந்து சிறிய செடியை எடுத்து வீட்டின் ஓரமாக ஒரு புறம் வைக்கலாம். ஆனால் வீட்டின் முன் வைப்பது நல்லதல்ல.
மேலும் ரோஜா செடிகளை கூட வீட்டிற்கு முன் வைக்கக் கூடாது. ஏனெனில் முட்கள் நிறைந்த செடி என்பதால் அதனாலும் பல பிரச்சனைகள் வரக்கூடும்.

எனவே அதை நீங்கள் ஒரு ஓரமாக அல்லது மாடி தோட்டம் போல் மாடியில் கூட வைத்து வளர்க்கலாம்.

ஆனால் வீட்டின் முன் நுழை வாயிலில் வைத்து விடாதீர்கள்.