இந்த நம்பர்களில் இருந்து போன் வந்தால் எடுக்காதீங்க!! காவல்துறை எச்சரிக்கை!!
செல்போனில் இருக்கும் தொழில்நுட்பம் நமக்கு எந்த அளவிற்கு உபயோகமாக இருக்கிறதோ, அதே அளவிற்கு நமக்கு ஆபத்தையும் தருகிறது. செல்போன் மூலம் மோசடி செய்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேதான் இருக்கிறது. அதிலும் உங்களுக்கு லாட்டரி விழுந்துள்ளது எனவும், பரிசு பொருள் வந்து இருக்கிறது அதற்கு பணம் கட்ட வேண்டும் எனவும் கூறி பணம் பறிக்கும் கும்பல்களும் அதிகமாகவே உள்ளது. தற்போது சைபர்கிரைம் போலீசார், பொது மக்களுக்கு புதிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர்.
பண பறிப்பில் ஈடுபட்டு வரும் சில கும்பல்கள், வெளி மாநிலங்களில் இருந்தோ அல்லது வெளிநாடுகளில் இருந்தோ பெண்களை பேசவைத்து ஏமாற்றுகிறார்கள். இவர்கள் உங்களுடைய தொலைபேசி எண்கள் மற்றும் உங்களுடைய விவரங்களை பேஸ்புக் போன்ற சோசியல் மீடியாவில் இருந்து எடுக்கிறார்கள். இதை வைத்து உங்களுக்கு வெளிநாடுகளிருந்து குறிப்பாக வியட்நாம், மொராக்கோ, இந்தோனேசியா போன்ற நாடுகளில் இருந்து போட்டோவுடன் கூடிய அழைப்பு அல்லது வீடியோ அழைப்பு போன்றவை வருகிறது.
இது போன்ற அழைப்புகள் வரும்போது, நாம் பேசினால் நம்முடைய செல்போன் செயலிழந்து போகிறது. எதிர்முனையில் ஒரு சில அழைப்புகளில் பெண்கள் பேசுகிறார்கள் அல்லது யாரும் பேசாமல் மௌனமாக இருக்கிறார்கள். இது போன்ற அழைப்புகள் எதற்கு வருகிறது என தெரிவதில்லை. இது தேவையில்லாத சிக்கல்களை ஏற்படுத்தக் கூடும் என்பதால் இது போன்ற அழைப்புகளை எடுக்க வேண்டாம்.
அதே போல் ஒரு சில வெளிநாட்டு அழைப்புகளில் பெண்கள் ஆடையின்றி தோன்றுகிறார்கள் என்றும் அவர்களை தாங்கள் பார்க்கும் போது உங்களுடைய முகம் அவர்களுடைய செல்போனில் பதிவாகி விடும். இதை வைத்து அவர்கள் உங்களை மிரட்டி பணம் பறிக்க அதிக வாய்ப்புள்ளது. இது போன்று யாரவது பாதிக்கப்பட்டு இருந்தால் அவர்கள் தயங்காமல் புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப் பட்டுள்ளது.
தற்போது இன்னுமொரு முக்கியமான அறிவிப்பை போலீசார் வெளியிட்டுள்ளனர். அதாவது +63, +84, +62, +254, +212, +917 போன்று தொடங்கும் வெளிநாட்டு எண்களில் இருந்து வரும் வாட்ஸ் அப் கால்களை எடுக்க கூடாது எனவும், சோசியல் மீடியாவில் இருக்கும் நம்முடைய தகவல்களை வைத்து நம்மை மோசடி செய்வதற்கான முயற்சிகள் இது போன்ற நம்பர்களில் இருந்து நடக்கிறது. இந்த எண்களில் இருந்து நள்ளிரவில் அதிக அழைப்புகள் வருவதாகவும், தொழிலதிபர்கள், ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு இது போன்ற அழைப்புகள் வந்துள்ளன.
மேலே குறிப்பிட்ட நம்பர்களை குறித்து வைத்து கொள்ளுங்கள். இது போன்ற நம்பர்களில் இருந்து போன் வந்தால் உடனடியாக அந்த நம்பரை பிளாக் செய்து, சைபர்கிரைம் போலீசாரிடம் புகார் கொடுங்கள் என போலீசார் தெரிவித்தனர்.