புரதச்சத்து நிறைந்த முட்டையை சாப்பிடுவதால் உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும் என்பது அனைவரும் அறிந்த உண்மையே.முட்டையை வேகவைத்து சாப்பிட்டு வந்தால் எலும்பு ஆரோக்கியம் அதிகரிக்கும்.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தினமும் ஒரு முட்டையை உட்கொள்ள வேண்டும்.உடல் ஆரோக்கியத்திற்கு தேவைப்படும் முக்கிய சத்தான புரதம் இதில் அதிகளவு நிறைந்திருக்கிறது.இது தவிர மேலும் பல ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன.
முட்டை ஊட்டச்சத்துக்கள்:
*புரதம்
*சோடியம்
*பொட்டாசியம்
*இரும்பு
*கால்சியம்
*மெக்னீசியம்
*வைட்டமின்கள்
இத்தனை நன்மைகள் நிறைந்த முட்டையை சில உணவுகளுடன் சேர்த்து சாப்பிடும் பொழுது அவை பக்கவிளைவுகளை ஏற்படுத்திவிடும்.
முட்டையுடன் சேர்த்து சாப்பிடக் கூடாத உணவு வகைகள்:
1)சர்க்கரை உணவுகள்
நீங்கள் முட்டையை உட்கொண்ட பிறகு சர்க்கரை நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.இவை இரண்டையும் ஒன்றாக எடுத்துக் கொண்டால் உடலில் இரத்த கட்டிகள் உருவாகிவிடும்.
2)வாழைப்பழம்
முட்டை சாப்பிட்ட பிறகு வாழைப்பழம் சாப்பிட்டால் வயிறு உப்பசம்,செரிமானப் பிரச்சனை போன்ற பாதிப்புகள் ஏற்படும்.
3)அசைவ உணவுகள்
பெரும்பாலானோர் அசைவ உணவுகளுடன் முட்டை வைத்து சாப்பிடுகின்றனர்.இவை இரண்டையும் சேர்த்து உட்கொண்டால் செரிமானப் பிரச்சனை ஏற்படும்.
4)தேநீர்
முட்டை சாப்பிட பின்னர் தேநீர்,காபி போன்ற பானங்களை பருகினால் மலச்சிக்கல்,செரிமானப் பிரச்சனை போன்றவை ஏற்படும்.
5)சோயா
முட்டை சாப்பிட்ட பிறகு சோயா பால்,சோயா சீஸ் போன்றவற்றை உட்கொண்டால் செரிமானப் பிரச்சனை,மலச்சிக்கல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும்.
6)பால் பொருட்கள்
முட்டையுடன் பால்,சீஸ்,தயிர்,மோர் போன்றவற்றை உட்கொண்டால் அஜீரணக் கோளாறு,மலச்சிக்கல்,வயிற்று வலி,வயிறு உப்பசம் போன்ற பாதிப்புகள் ஏற்படும்.
7)முட்டை சாப்பிட்ட பிறகு மது பானங்களை குடிக்க கூடாது.இதனால் கடுமையான பாதிப்புகள் ஏற்படும்.இதயம் சம்மந்தப்பட்ட பிரச்சனை இருப்பவர்கள் முட்டை அதிகம் சாப்பிடக் கூடாது.அதேபோல் கல்லீரல் சம்மந்தப்பட்ட பிரச்சனை இருப்பவர்கள் முட்டையை தவிர்க்க வேண்டும்.