போதை பொருட்களை பள்ளி அருகே விற்காதீர்கள்!! பிரபல நடிகர்  அறிவுறுத்தல் !!

Photo of author

By Jeevitha

போதை பொருட்களை பள்ளி அருகே விற்காதீர்கள்!! பிரபல நடிகர்  அறிவுறுத்தல் !!

நடிகர் கார்த்திக் சிவக்குமார் தமிழ் திரைப்படங்களில் அதிகம் நடித்துள்ளார். இவர் பருத்தி வீரன் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர். தற்போது வெளிவந்த கைதி படம் மூலம் புகழ் உச்சிக்கு சென்றவர். மேலும் அவர் தற்போது வந்த பொன்னியன் செல்வன் படத்தில் வந்தியதேவன் கதாப்பாத்திரத்தில் நடித்து அரங்கை அதிரவைத்தார்.

இந்நிலையில் அவர் காவல் துறை சார்பில் சென்னை கடற்கரை விவேகானந்தர் இல்லதில் அருகே சர்வதேச போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் இவர் மட்டுமின்றி நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் மாறும் பாடகர் கானா பாலா கலந்துக் கொண்டுள்ளார்கள்.

மேலும் அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் ஈரோடு மகேஷ் பங்கேற்றார்.

இப்போது உள்ள காலக்கட்டத்தில் போதைப்பொருட்கள் அதிகம் விற்கப்படுகிறது என்று நடிகர் கார்த்திக் கூறினார். மேலும் தற்போது உள்ள இளைஞர்கள் போதை பழக்கத்திற்கு அடிமையாவது வேதனை அளிக்கிறது என்றும் கூறினார்.

இப்போது எல்லாம் பள்ளி அருகில் அதிகம் போதைப்பொருட்கள் விற்கப்படுகிறார்கள் அவரின் வேதனையை தெரிவித்தார். மேலும் இனி யாரும் பள்ளி அருகே போதைப்பொருட்களை விற்காதீர்கள் என்றும் கூறியுள்ளார்.