மழைக்காலத்தில் வீசிங் பிரச்சனையால் அவதியா!! இதை 7 நாள் இதை மட்டும் பண்ணுங்க!!
மழைக்காலம் தொடங்கி விட்டாலே பலருக்கும் இந்த வீசிங் பிரச்சனையானது அதிகரித்து காணப்படும்.முன்பை விட சுவாசிப்பதில் மிகவும் சிரமமாக எண்ணுவர். அவ்வாறு இருப்பவர்கள் இந்த பதிவில் வருவதை ஒரு வாரம் பின்பற்றினாலே போதும் வீசிங் என்ற பேச்சுக்கு இடம் இருக்காது.
தேவையான பொருட்கள்:
கிராம்பு 5
மிளகு 8
துளசி சிறிதளவு
இஞ்சி சிறிதளவு
தேன் சிறிதளவு
கிராம்பு:
கிராம்பானது சளியை வெளியேற்ற உதவும். அதுமட்டுமின்றி மூச்சு இரைப்பு குணமாகும்.
மிளகு:
மிளகு நமது உடலில் உள்ள சளியை கரைப்பதுடன் துக்கமின்மைக்கும் நல்ல மருந்தாக பயன்படும்.
தேன்:
ஆஸ்துமா பிரச்சனை உள்ளவர்கள் கட்டாயம் தேன் எடுத்துக் கொள்ள வேண்டும். இது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க உதவும்.
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றிக் கொள்ள வேண்டும்.
பின்பு அந்த பாத்திரத்தை அடுப்பில் வைக்க வேண்டும்.
அந்த தண்ணீரில், எடுத்து வைத்துள்ள இஞ்சி மிளகு கிராம்பு என அனைத்து பொருட்களையும் சேர்க்க வேண்டும்.
தண்ணீரானது குறைந்தபட்சமாக ஐந்து நிமிடம் கொதிக்க வேண்டும்.
ஐந்து நிமிடம் கொதித்ததும் அடுப்பை அணைத்துவிட்டு அந்த பானத்தை ஆற விட வேண்டும்.
பின்பு அந்த தண்ணீரை வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.
அதில் சிறிதளவு தேன் சேர்த்துக் கொள்ளலாம்.
இதனை காலையில் வெறும் வயிற்றில் ஏழு நாட்கள் குடித்து வர வீசிங் பிரச்சனை முழுமையாக குணமாகும்.