மாணவர்களுக்கு பாடம் நடத்த கூடாது! பருவமழையால் பள்ளி கல்வித்துறை அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு!

0
143
Do not teach students! Announcement made by the Minister of School Education due to monsoon rains!
Do not teach students! Announcement made by the Minister of School Education due to monsoon rains!

மாணவர்களுக்கு பாடம் நடத்த கூடாது! பருவமழையால் பள்ளி கல்வித்துறை அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு!

தமிழக முழுவதும் வரும் 14ஆம் தேதி வரை வடக்கிழக்கு பருவமழை இருக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள வீடுகள் மற்றும் பள்ளிகளில் தண்ணீர் சூழ்ந்து மக்களின் அன்றாட வாழ்க்கையானது பெரிதும் பாதிப்படைந்துள்ளது. அதிக பருவமழை காரணமாக சென்னை மற்றும் இதர மாவட்டங்களில் ஓரிரு நாட்கள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுப்பு அளிக்கப்பட்டது.

இந்த விடுப்பை ஈடு செய்ய சனிக்கிழமைகளில் பள்ளி செயல்படலாம் என்ற அறிவிப்பும் வெளிவந்தது.இந்நிலையில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையால் தற்போது வரை 26 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களுக்கு தல நான்கு லட்சம் வரை நிவாரணம் வழங்குவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதற்கு அடுத்த கட்டமாக பள்ளி கல்வித்துறை ஓர் அறிவிப்பு ஒன்றைவெளியிட்டுள்ளது. பருவமழையால் முன்பு கட்டப்பட்ட பள்ளிகள் சேதம் அடைந்த காணப்படும்.

அவ்வாறு சேதமடைந்த பள்ளிகளை உடனடியாக எடுத்து புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். இது குறித்து அந்தந்த மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் பள்ளிக்கல்வித்துறை அன்பில் மகேஷ் கூறியுள்ளார். பள்ளி கட்டிடங்களில் நீர் கசிந்தாலோ அல்லது மின்சாரம் சம்பந்தமாக ஏதேனும் பிரச்சனை இருந்தாலும் உடனடியாக அதனை கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அதுமட்டுமின்றி அவ்வாறு பாதிப்படைந்த கட்டிடங்களில் மாணவர்களை வைத்து பாடங்கள் நடத்தக் கூடாது என்று தெரிவித்துள்ளார். ஒவ்வொரு அரசு பள்ளிகளும் நல்ல முறையில் உள்ளதா என்பதை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும் என்ற உத்தரவிட்டார்.

Previous articleவெதர்மேனின் லேட்டஸ்ட் ரிப்போர்ட்! வரும் 14ஆம் தேதி வரையில் தமிழகத்தில் பரவலான மழைக்கு வாய்ப்பு!
Next articleதான் சானியாவில் ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளான விமானம்! 19 பேர் பரிதாப பலி மீட்பு பணிகள் தீவிரம்!