முழங்காலுக்கும் மொட்டைத் தலைக்கும் முடிச்சு போடாதீர்கள்! ஓபிஎஸ் காட்டமான பதில்!

Photo of author

By Sakthi

கடந்த மூன்று தினங்களாக சென்னையில் வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டு வரும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் நிவாரணப் பொருட்களையும் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு வழங்கி வருகின்றார். இந்த சூழ்நிலையில், நேற்றைய தினம் தியாகராய நகர் சூளைமேடு போன்ற பகுதிகளை ஓபிஎஸ் பார்வையிட்டு நிவாரண உதவிகளையும் வழங்கினார்.

அதன்பிறகு பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசிய அவரிடம் நீங்களும், எதிர்க்கட்சித் தலைவரும் தனித்தனியாக ஆய்வு மேற்கொள்வது விமர்சனத்திற்கு உள்ளாகின்றது என பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பியிருக்கிறார்கள்.

இதற்கு பதில் தெரிவித்த ஓ பன்னீர்செல்வம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தான் நாங்கள் நிவாரண பொருட்களை கொடுத்துக் கொண்டிருக்கின்றோம், இது எந்தவிதமான பாகுபாடும் இல்லை பார்க்கின்ற பார்வையில் தான் குறைபாடு இருக்கின்றது. தனித்தனியாக ஆய்வு செய்தால் தனித்தனியாக செயல்படுகிறோம் என்று தெரிவிப்பது ஏற்புடையது கிடையாது. தற்சமயம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி வழங்கும் பணியை தான் கவனிக்க வேண்டும் அதை தவிர்த்து விட்டு வேறு எந்த விவாதமும் செய்ய நாங்கள் தயாராக இல்லை என்று தெரிவித்தார்.

கடந்த 2015 ஆம் வருடம் வெள்ளத்திற்கு பின்னர் அதிமுக எடுத்த நடவடிக்கையின் காரணமாக, தான் தற்சமயம் மழை பாதிப்பு குறைந்து வருகிறது எனவும், அவர் கூறியிருக்கிறார், அதிமுக ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற ஸ்மார்ட் சிட்டி ஊழல் தொடர்பாக விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என முதலமைச்சர் தெரிவித்திருக்கிறாரே என்று கேள்வி எழுப்பியதற்கு ஓபிஎஸ் பதிலளிக்கவில்லை என்று சொல்லப்படுகிறது.