வீட்டில் ஏற்படும் கஷ்டங்கள் அனைத்தும் நீங்கி செல்வ செழிப்பு உண்டாக “மிளகு பரிகாரம்” செய்யுங்கள்!!

Photo of author

By Divya

வீட்டில் ஏற்படும் கஷ்டங்கள் அனைத்தும் நீங்கி செல்வ செழிப்பு உண்டாக “மிளகு பரிகாரம்” செய்யுங்கள்!!

இன்றைய காலத்தில் வாழ்க்கையை நகர்த்த பணம் மிகவும் முக்கியான ஒன்றாக இருக்கிறது.பணம் இல்லாவிட்டால் ஒருவர் கூட நம்மை மதிக்க மாட்டார்கள்.தற்போதைய சூழலில் பணம் இருப்பவர்களுக்கு மட்டும் தான் இங்கு மரியாதை என்ற நிலை உருவாகி விட்டது.

இந்நிலையில் இந்த பணத்தை பெருக்க சில வழிகளை கடைபிடிப்பதன் மூலம் வீட்டில் அதிகளவில் பணம்,செல்வம் தடை இன்றி சேர்ந்து கொண்டே இருக்கும்.

வீட்டில் ஏற்படும் கஷ்டங்கள் அனைத்தும் நீங்கி செல்வ செழிப்பு உண்டாக மிளகு பரிகாரம் செய்வது எப்படி?

முதலில் இந்த பரிகாரம் மேற்கொள்வதற்கு முன் வீட்டு பூஜை அறையை நன்கு சுத்தம் செய்து கொள்ளவும்.பழைய மாலை,காய்ந்த பூக்கள் இருந்தால் அதை முறையாக அப்புறப்படுத்தவும்.

பின்னர் தலைக்கு குளித்து விட்டு பூஜை அறைக்குள் நுழையவும்.பின்னர் பூஜை அறையில் உள்ள விளக்கை ஏற்றி வைக்கவும்.

வீட்டில் செல்வம் செழித்து இருக்க ஒரு வெள்ளை நிற காட்டன் துணி எடுத்து அதில் 50 கிராம் மிளகு,7 பச்சை கற்பூரம்,1 கைப்பிடி அளவு பச்சரிசி போட்டு ஒரு மூட்டை போல் கட்டிக் கொள்ளவும்.

இந்த மிளகு + பச்சை கற்பூரம் + பச்சரிசி மூட்டையை பூஜை அறையில் வைத்து வீட்டில் ஏற்பட்டுள்ள அனைத்து கஷ்டங்களும் விலகி செல்வம்.பணம் தடையின்றி சேர வேண்டுமென மனதில் வேண்டிக் கொள்ளவும்.பிறகு இந்த மூட்டையை வீட்டில் பணப்பெட்டி இருக்கும் இடத்தில் வைக்கவும்.

இந்த அற்புத பரிகாரத்தை புதன் கிழமை, வெள்ளி, சனி, அமாவாசை மற்றும் பௌர்ணமி உள்ளிட்ட நாட்களில் அதிகாலை 4 மணி முதல் 12 மணிக்குள்ள மட்டும் தான் செய்ய வேண்டும் என்பதை மனதில் வைத்து கொள்ளுங்கள்.

பின்னர் இந்த மூட்டையை ஒரு மாதம் கழித்து நீர் ஓடைகளில் விட்டு விட வேண்டும்.இவ்வாறு இந்த பரிகாரத்தை முறையாக செய்வதன் மூலம் வீட்டில் ஏற்பட்டுள்ள கஷ்டங்கள் நீங்கி செல்வம் பெருகி கொண்டே இருக்கும்.