குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குடற்புழு பாதிப்பால் அவதியடைந்து வருகின்றனர்.குடற்புழு பிரச்சனையை சரி செய்ய இங்கு தரப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை பின்பற்றுங்கள்.
குடற்புழுக்களை அழிக்கும் வீட்டு வைத்திய குறிப்புகள்:
1)கற்பூரவல்லி எண்ணெய் – 5 மில்லி அளவு
2)எலுமிச்சை சாறு – ஒரு தேக்கரண்டி
3)தண்ணீர் – ஒரு கிளாஸ்
பாத்திரம் ஒன்றில் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.பின்னர் இதை கிளாஸிற்கு ஊற்றி 5 மில்லி கற்பூரவல்லி எண்ணெய் சேர்த்து மிக்ஸ் செய்ய வேண்டும்.
பிறகு ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலந்து பெருகினால் குடற்புழுக்கள் துடித்து இறந்து மலத்தில் வந்துவிடும்.
1)கிராம்பு – இரண்டு
2)மஞ்சள் தூள் – சிட்டிகை அளவு
3)தண்ணீர் – ஒரு கிளாஸ்
ஒரு கிளாஸ் அளவு தண்ணீரை பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்து சூடுபடுத்த வேண்டும்.பிறகு இரண்டு கிராம்பை போட்டு குறைவான தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.
அடுத்து சிட்டிகை அளவு மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி பருகினால் குடற்புழுக்கள் அழிந்துவிடும்.
1)விளக்கெண்ணெய் – ஒரு தேக்கரண்டி
2)பசும் பால் – ஒரு கிளாஸ்
அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் பசும் பால் ஊற்றி காய்ச்ச வேண்டும்.பிறகு இதை கிளாஸிற்கு வடிகட்டி ஒரு தேக்கரண்டி விளக்கெண்ணெய் ஊற்றி கலக்கி குடித்தால் குடற்புழுக்கள் நீங்கிவிடும்.இதை தொடர்ந்து செய்து வந்தால் ஆசனவாய் அரிப்பு நீங்கிவிடும்.
1)பூண்டு பல் – இரண்டு
2)தண்ணீர் – ஒரு கிளாஸ்
இரண்டு பூண்டு பல்லை நறுக்கி பாத்திரத்தில் போட்டுக் கொள்ள வேண்டும்.பிறகு அதில் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி குறைவான தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.இந்த பூண்டு பானத்தை வடிகட்டி குடித்து வந்தால் குடற்புழு நீங்கிவிடும்.ஆசனவாய் அரிப்பு பிரச்சனை முழுமையாக சரியாகிவிடும்.
1)வேப்பங்கொழுந்து – ஒரு கொத்து
2)தண்ணீர் – ஒரு கிளாஸ்
3)மிளகு – இரண்டு
4)பூண்டு பற்கள் – இரண்டு
அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.பிறகு ஒரு கொத்து வேப்பங் கொழுந்தை அதில் போட்டுக் கொள்ள வேண்டும்.
அடுத்து இரண்டு மிளகை உரலில் போட்டு தட்டி தண்ணீரில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.அடுத்து இரண்டு பல் பூண்டை தோல் நீக்கிவிட்டு பொடியாக நறுக்கி போட்டு மிதமான தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.இந்த நீரை வடிகட்டி பருகி வந்தால் குடற்புழுக்கள் முற்றிலும் அழிந்துவிடும்.