மனிதர்களுக்கு நிம்மதியான தூக்கம் இருந்தால் மட்டுமே நோயின்றி ஆரோக்கியமாக வாழ முடியும்.ஒவ்வொரு மனிதருக்கும் 8 மணி நேர தூக்கம் அவசியமான ஒன்றாக உள்ளது.அப்படி இருக்கையில் இன்று பலர் நல்ல தூக்கம் இல்லாமல் கஷ்டப்படுகின்றனர்.
உங்களால் ஒவ்வொரு நாளும் சரியான உறக்கத்தை அனுபவிக்க முடியவில்லை என்றால் நிச்சயம் இரத்த அழுத்தம்,இதய நோய்,சர்க்கரை நோய் போன்ற பாதிப்புகளுக்கு ஆளாக நேரிடும்.
தூக்கமின்மை காரணங்கள்:
1)மன அழுத்தம்
2)உடல் நோய்
3)வேலைப்பளு
4)ஆரோக்கியம் இல்லாத உணவு
தேவையான பொருட்கள்:-
1)அஸ்வகந்தா பொடி – ஒரு ஸ்பூன்
2)தண்ணீர்விட்டான் கிழங்கு பொடி – ஒரு ஸ்பூன்
3)ஜாதிக்காய் பொடி – ஒரு ஸ்பூன்
4)பசும் பால் – ஒரு கப்
பயன்படுத்தும் முறை:-
அஸ்வகந்தா பொடி,தண்ணீர்விட்டான் கிழங்கு பொடி மற்றும் ஜாதிக்காய் பொடி நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.தங்களது தேவைக்கேற்ப வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.
இப்பொழுது சொல்லப்போகும் செய்முறையை இரவு நேரத்தில் செய்ய வேண்டும்.முதலில் பாத்திரம் ஒன்றை அடுப்பில் வைத்து ஒரு கப் பசும் பால் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.
பால் நுரை பொங்கும் தருவாயில் ஒரு ஸ்பூன் அஸ்வகந்தா பொடி,ஒரு ஸ்பூன் தண்ணீர்விட்டான் கிழங்கு பொடி மற்றும் ஒரு ஸ்பூன் ஜாதிக்காய் பொடி சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்ய வேண்டும்.
பின்னர் இரண்டு நிமிடங்களுக்கு மேல் இந்த பாலை குறைவான தீயில் கொதிக்க வைத்து அடுப்பை அணைக்க வேண்டும்.அதன் பின்னர் இந்த பாலை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி இரவு நேரத்தில் பருகிவிட்டு உறங்க செல்ல வேண்டும்.
இந்த பாலை தினமும் பருகி வந்தால் நிம்மதியான தூக்கம் வரும்.மன நிம்மதி இன்றி கஷ்டப்படும் நபர்கள் இந்த பாலை பருகினால் மன அழுத்தம்,மன உளைச்சல் நீங்கும்.
இரவில் தூக்கமின்மை பிரச்சனையால் அவதியடைந்து வருபவர்கள்,தூக்க மாத்திரை சாப்பிட்டால் மட்டும்
தான் தூக்கம் வரும் என்ற நிலையில் உள்ளவர்கள் இந்த பாலை பருகி வந்தால் நிம்மதியான தூக்கம் வரும்.
இரத்த அழுத்தம்,சர்க்கரை வியாதி,அல்சர் போன்ற பாதிப்புகளில் இருந்து மீள இந்த பானத்தை செய்து பருகலாம்.கை,கால் வலி பிரச்சனை இருப்பவர்கள் இந்த மூன்று பொடி சேர்த்த பாலை பருகி வரலாம்.
இரவு நேரத்தில் நிம்மதியாக தூங்க விருப்பினால் அஸ்வகந்தா பொடியை பாலில் போட்டு கலக்கி பருகலாம்.அடிக்கடி ஜாதிக்காய் லேகியம் சாப்பிட்டு வந்தால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.