உங்கள் வீட்டிற்கு அடிக்கடி பாம்பு வருகிறதா? இது இருந்தால் எந்த பாம்பும் வீட்டை நெருங்காது!!

0
141
#image_title

உங்கள் வீட்டிற்கு அடிக்கடி பாம்பு வருகிறதா? இது இருந்தால் எந்த பாம்பும் வீட்டை நெருங்காது!!

பாம்பு என்ற சொல்லை கேட்டலே கண்ணில் பயம் வந்து விடும்.எப்பேர்ப்பட்ட வீரனும் பாம்பை கண்டால் அஞ்சத் தான் செய்வான்.பாம்பில் கட்டு விரியன்,சாரை,மலை பாம்பு,நாகம் என்று பல வகைகள் இருக்கிறது.பாம்புகள் புதர்,புற்றுகளில் அதிகம் வாழக் கூடியவை.

அதேபோல் அடிக்கடி வீட்டிற்கும் வந்து பதுங்கி கொண்டு மக்களை படுத்தி எடுத்து விடும்.முன்பெல்லாம் கிராம புறங்களில் தான் பாம்பு நடமாட்டம் அதிகளவு இருந்தது.ஆனால் இன்று காடுகளை அழித்து வீடுகள் கட்டுப்பட்டு வருவதால் நகரங்களிலும் பாம்பு நடமாட்டம் அதிகரிக்கத் தொடங்கி விட்டது.

பாம்புகள் வீட்டிற்குள் வராமல் இருக்க நம் முன்னோர்கள் காலத்தில் இருந்து பல விஷயங்கள் நடைமுறையில் இருக்கிறது.பூண்டு வாடை பாம்பிற்கு ஆகாது.

எனவே பூண்டை அரைத்து தண்ணீரில் கலந்து வீட்டை சுற்றி தெளிக்கலாம்.அதேபோல் வெங்காய வாடை பாம்பிற்கு ஆகாது.

சின்ன வெங்காயத்தை அரைத்து தண்ணீரில் போட்டு மஞ்சள் சேர்த்து வீட்டை சுற்றி தெளித்தால் பாம்பு நடமாட்டம் கட்டுப்படும்.

வீட்டு வாசலில் மாட்டு சாணம் தெளிக்கும் பழக்கம் கொண்டிருந்தால் சாணத்துடன் சிறிது பெருங்காயத் தூள் சேர்த்து தெளிக்கவும்.

வீட்டை சுற்றி இடம் வெங்காயம்,பூண்டு,பாம்பு கற்றாழை,சிறியா நங்கை செடிகளை வைத்து வளர்க்கலாம்.இதன் மூலம் வீட்டிற்கு பாம்பு வருவதை தடுக்க முடியும்.