Kanavu Palangal in Tamil : இவை உங்கள் கனவில் வருகின்றதா? கனவு பலன்கள் 

0
533

Kanavu Palangal in Tamil : இவை உங்கள் கனவில் வருகின்றதா? கனவு பலன்கள்

அத்தி மரம்:

அத்தி மரத்தை கனவில் காண்பது குடும்பத்தில் விவாக நிகழ்வு ஏற்படுவதைக் குறிக்கும்.

ஈச்ச மரம்:

ஈச்ச மரத்தைக் கனவில் கண்டால் தன்னுடைய சொந்த பந்தங்களுக்கிடையே பகைமை ஏற்படும் என்று பொருள்.

தோட்டம்:

உத்தியானம் அதாவது தோட்டம் வருவது போல் கனவு கண்டால் குடும்பம் விருத்தியாகும் என்பதைக் குறிக்கிறது.

கத்திரிக்காய்:

கத்திரிக்காய் சாப்பிடுவது போல் கனவு வந்தால் குடும்பத்தில் சௌபாக்கியம் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.

செடி மற்றும் மரம்:

செடிகளுக்கும், மரங்களுக்கும் தண்ணீர் விடுவது போல கனவு கண்டால், உங்களுக்கு நன்மை செய்யவே பிறந்தவர்கள் போல் சிலர் உங்களை தேடி வந்து உதவுவார்கள். அவர்களால் மனம் மகிழ்ச்சி அடையும். புதிய முயற்சியில் வெற்றி பெறுவீர்கள்.

பூக்கள்:

செடியில் இருந்து பூக்களை பறிப்பது போல கனவு கண்டால், நல்ல பலன்கள் கிடைக்கும். நிலம்,வீடு, நகை வாங்கும் யோகம் ஏற்படும். வேலையில் திருப்தியான நிலை இருக்கும். வியாதியால் அவதிப்பட்டவர்களுக்கு நல்ல மருத்துவத்தால் உடல் பிரச்சனை விலகும்.

Previous articleபாவத்தை போக்கி செல்வத்தை பெருக்க.. மூன்றாம் பிறையை தரிசனம் செய்யுங்கள்…!!
Next article60 . அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுமி மீட்கப்பட்டவுடன் மார்போடு அனைத்த தாயின் பாசம்.!..