60 . அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுமி மீட்கப்பட்டவுடன் மார்போடு அனைத்த தாயின் பாசம்.!..

0
97

60 . அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுமி மீட்கப்பட்டவுடன் மார்போடு அனைத்த தாயின் பாசம்.!..

 

சுரேந்திரநகர் மாவட்டத்தில் உள்ள கஜன்வாவ் கிராமத்தில் மனிஷா என்ற 12 வயது சிறுமி கிணறு அருகே நண்பர்களுடன் விளையாடி கொண்டிருந்தார்.அவர் விளையாடிய இடத்தில் 700 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணறு ஒன்று இருந்தது.இதை கவனிக்காத விளையாட்டு சிறுமிகள் அங்கு விளையாடிவுள்ளார்கள்.

இந்நிலையில் இன்று காலை 7.30 மணியளவில் 500 முதல் 700 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தார் அந்த சிறுமி.இதையடுத்து ஊர் மக்கள் மீட்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.தகவலின் பேரில் மீட்கும் பணியினர் விரைந்து வந்தனர்.அந்த பகுதியில் சிறுமியை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்றது. மீட்பு பணியின் போது சிறுமிக்கு ஆக்சிஜன் சப்ளை துளை வழியாக வழங்கப்பட்டது. சிறுமியின் உடல்நிலை கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு வந்தது.

 

இந்நிலையில் 60 அடி ஆழத்தில் சிக்கியிருந்த சிறுமி சுமார் ஐந்து மணிநேர போராட்டத்திற்குப் பிறகு மதியம் உள்ளூர் சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் போலீசாரின் உதவியுடன் இராணுவ வீரர்களால் மீட்கப்பட்டார்.

 

இதையடுத்து சிறுமி, திரங்காத்ராவில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். தற்போது சிறுமியின் உடல்நிலை சீராக உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். தாயின் பாசத்திற்கு ஈடாகுமா மார்போடு தடவி அச்சிறுமையை கண்ணீர் மல்க அணைத்துக் கொண்டார் சிறுமியின் தாய்.

author avatar
Parthipan K