Kanavu Palangal in Tamil : கட்டிடங்கள் உங்கள் கனவில் வருகின்றதா? இதோ அதற்கான பலன்கள்!

Photo of author

By Parthipan K

Kanavu Palangal in Tamil : கட்டிடங்கள் உங்கள் கனவில் வருகின்றதா? இதோ அதற்கான பலன்கள்!

மேம்பாலங்கள்:
மேம்பாலங்களின் அடியில் நடந்து செல்வது போல் கனவு கண்டால், தொல்லைகள் வரப்போவதன் அறிகுறி என்பதாகும். அதன்மேல் நடந்து செல்வது போல் கனவு கண்டால் வெற்றி நிச்சயம்.

பெரிய மாளிகை:
பெரிய மாளிகை கனவில் வந்தால், பெரிய மனிதர்களின் தொடர்பு உங்களுக்கு ஏற்படும் என்று பொருள்.

புதிய கட்டிடம்:
புதிதாக கட்டப்பட்ட கட்டிடத்தை கனவில் கண்டால் உத்தியோக மாற்றம், நற்பலன் உண்டாகும். தொழிற்சாலைகள் கனவில் வந்தால், புது வியாபாரம் தொடங்கலாம், வெற்றியும் பெறலாம்.

பழுதடைந்த பாலம் :
பழுதடைந்த பாலத்தை உங்கள் கனவில் கண்டால், ஓர் ஆபத்தான காரியத்தை செய்ய வேண்டிய சூழ்நிலை உருவாகப் போகிறது என்று பொருள். அதை செய்து முடிப்பதற்கு பல தடைகள் வரும் ஆனாலும் அதை சமாளித்து நன்மைகள் பெறுவீர்கள்.

பாழான வீடு :
பாழான வீட்டைக் கனவில் கண்டால் குடும்பத்தில் வீண் குழப்பம் ஏற்பட்டு துன்பம் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.