சமையல் ருசிக்கனுமா! சமைக்கும் முன் இதை செய்தால் சமையலும் ருசிக்கும் வாழ்வும் சிறக்கும்!

Photo of author

By Kowsalya

நாம் காலையில் எழுந்து உடனே முதலில் சமையல் அறை சென்று சமைக்க ஆரம்பித்து விடுவோம். ஆனால் நாம் சமைக்கும் உணவுகள் எல்லா நேரமும் ஒரே ருசியாக இருப்பதில்லை. காரணம் நம் மனது தான். இரவில் நடந்த சண்டை நினைத்து கொண்டே சமைத்தால் என்ன ஆகும். சாப்பாட்டில் சுவை இருக்காது.

அதை நீக்கவே சமைக்கும் முன் இதை செய்தால் சமையலும் ருசிக்கும். வீட்டில் உள்ள சங்கடங்கள் விலகி வறுமையும் கஷ்டமும் என்றும் வராது.

நம் தமிழ் கலாச்சாரம் பண்பாடு போன்றவற்றில் ஒன்று சொல்ல அனைவரும் கேட்டிருப்போம். சமையலில் உப்பு காரம் மட்டும் அல்ல அன்பையும் சேர்த்து சமைத்தால் தான் உணவு ருசிக்கும் என்பார்கள். சமைக்கும் பொருட்களில் மட்டும் ருசி அல்ல. சமைப்பவர்களின் மன சந்தோசம் துக்கம் அனைத்தும் அடங்கியிருக்கும் என்பது உண்மை.

 

சமையலறை என்பது பூஜை அறை போன்ற புனிதமானது. அங்கு தான் அன்னபூரணி அக்கினி தேவன் வாசம் செய்கின்றனர். பூஜை அறைக்கு நிகரான முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

தினமும் காலையில் பூஜை அறைக்கு விளக்கு ஏற்றுவது போல் சமையல் அறையிலும் விளக்கை ஏற்றி வைத்து வழிபட்டு பின் சமையல் வேலைகளை ஆரம்பிக்க வேண்டும்.

சமையல் அறைக்கு என தனியாக ஒரு விளக்கை வைத்துக் கொள்ள வேண்டும். அந்த விளக்கிற்கு குங்குமம், மஞ்சள், சந்தனம் ஆகியவற்றை இடவேண்டும். பின்னர் நல்லெண்ணெய்யை எடுத்து தீபத்திற்கு எண்ணெய் ஊற்றி தீபத்தை ஏற்றி விட்டு அன்னபூரணியையும், அக்னி பகவானையும் மனதார வேண்டிக்கொண்டு சமையல் வேலையை துவங்குங்கள். இது போன்று செய்யும் பொழுது மனம் நிம்மதி பெரும். 

நெருப்பு போன்ற பொருளை பயன்படுத்துவதால் மிகவும் ஜாக்கிரதையாக கையாள வேண்டும். அப்படி ஏற்ற கூடிய விளக்கை வடக்கு கிழக்கு திசையில் நோக்கியவாறு ஏற்றி வழிபட வேண்டும்.

சமையல் அறையில் விளக்கேற்றி வைத்து சமையலை துவங்கினால் அன்னபூரணியின் அருள் கிடைக்க பெற்று வறுமை இல்லாத நிலை வரும். உங்கள் வீட்டில் உணவிற்கு பஞ்சம் வரவே வராது. மாதவிடாய் காலங்களில் தீபத்தை ஏற்றி சமையல் துவங்கலாம். அதில் எந்த விதமான தோஷமும் இல்லை. மற்றபடி , இறந்த தீட்டு போன்ற காரியத்தை செய்த பின் குளித்து விட்டு தீபம் ஏற்றி பின் சமையலை துவங்கலாம். தினமும் இப்படி செய்து வாருங்கள். உங்கள் வீட்டில் மாற்றங்கள் ஏற்படுவதை நிச்சயம் உணர்வீர்கள்.