குறைந்த விலையில் ரயிலில் பயணம் செய்ய இத பண்ணுங்க!! IRCTC ஐ விட குறைந்த கட்டணம்!!

Photo of author

By Gayathri

ஐஆர்சிடிசி ரயில் இணைப்பு செயலி தான் இந்திய ரயில்வேயின் அதிகாரப்பூர்வ பயன்பாடாகும். இதில், தட்கல் முன்பதிவு, உறுதிப்படுத்தல் நிலை சரிபார்ப்பு, இருக்கை தேர்வு, ரயில் அட்டவணை மற்றும் PNR நிலை போன்ற அம்சங்களை நீங்கள் பெறலாம். இது பயன்படுத்த எளிதானது, டிக்கெட் முன்பதிவு செய்ய பாதுகாப்பான வழிகளில் ஒன்றாக இது உள்ளது.

எனினும், இதேபோன்று இதனை விட குறைந்த கட்டணம் உள்ள நம்பகத் தன்மை வாய்ந்த செயலைகளும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன அவற்றை இந்த பதிவில் காண்போம். ரயில் பயணம் மேற்கொள்வது என்பது இந்தியாவைப் பொறுத்தவரையில் கோடிக்கணக்கான மக்களின் தின வாழ்க்கைக்கு அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

பண்டிகை காலங்கள் மற்றும் தொடர் விடுமுறை காலங்களில் டிக்கெட் முன்பதிவு என்பது மிகவும் அவசியமான ஒன்றாக மாறுகிறது. அதுவும் குறிப்பாக 30 முதல் 60 நாட்களுக்கு முன்னதாகவே முன்பதிவு செய்பவருக்கு மட்டுமே வெயிட்டிங்லெஸ்ட் அல்லது நேரடி புக்கிங் கிடைக்கிறது குறிப்பிடத்தக்கது.

மற்ற முக்கிய டிக்கெட் பதிவு செயலிகள் :-

✓ ConfirmTkt :- பயன்பாடு உறுதிப்படுத்தல் கணிப்பு மற்றும் எளிதாக உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட் வசதியை வழங்குகிறது. உங்கள் டிக்கெட் காத்திருப்புப் பட்டியலில் இருந்தால், உங்கள் டிக்கெட் உறுதி செய்யப்படுவதற்கான நிகழ்தகவைக் கணக்கிட இந்தப் பயன்பாடு உதவுகிறது.

✓ Goibibo :- ரயில் டிக்கெட் முன்பதிவுக்கான பிரபலமான செயலியாகும். இதில், ரயில் அட்டவணை, PNR நிலை சரிபார்ப்பு மற்றும் உறுதிப்படுத்தல் கணிப்பு போன்ற அம்சங்களை நீங்கள் பெறலாம். பயன்பாட்டில் பல்வேறு சலுகைகள் மற்றும் கேஷ்பேக் கிடைக்கின்றன, இது மலிவான விலையில் டிக்கெட் முன்பதிவு செய்ய உதவுகிறது.

✓ MakeMyTrip :- செயலி ரயில், விமானம், பேருந்து மற்றும் ஹோட்டல் முன்பதிவுகள் அனைத்தையும் ஒரே தளத்தில் வழங்குகிறது. இதில், நீங்கள் பிரத்யேக சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளையும் பெறுவீர்கள். மேலும், பயணக் காப்பீட்டு வசதியும் இதில் வழங்கப்பட்டுள்ளது.